உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பெண் விவசாயிகளுக்கு 6 சதவீத வட்டியில் கடன்

பெண் விவசாயிகளுக்கு 6 சதவீத வட்டியில் கடன்

கால்நடை

l 'அம்ருத ஸ்வாபிமானி' திட்டம் எனும் கால்நடை வளர்ப்போருக்கான திட்டம் நடப்பாண்டும் நீடிக்கும். 10,000 பயனாளிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்l அம்ருத மஹால், ஹள்ளிகார், கிலாரி இன பசுக்களின் இன பெருக்கத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்l பால் உற்பத்தியை ஊக்கப்படுத்தும் நோக்கில், பசு, எருமை வாங்க பெண் விவசாயிகள் பெற்றுள்ள கடனை, சரியான நேரத்தில் அடைத்து விட்டால், மாநில அரசே 6 சதவீதம் வட்டியில் கடனுதவி வழங்கும்l பன்றி, கோழி வளர்ப்பை ஊக்கப்படுத்த, ஆர்வம் உள்ள விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்படும்

கால்நடை மருத்துவமனைகள்

l மாவட்டத்தில் உள்ள சிறப்பு கால்நடை மருத்துவமனைகள், தாலுகா அளவிலும் அமைக்கப்படும். முதற்கட்டமாக முக்கியமான 20 தாலுகாக்களில், கால்நடை மருத்துவமனைகள், சிறப்பு மருத்துவமனைகளாக தரம் உயர்த்தப்படும். இதற்கு 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும்l வாடகை கட்டடம், சிதிலமடைந்த கட்டடங்களில் செயல்படும், 200 கால்நடை மருத்துவமனைகளுக்கு, 100 கோடி ரூபாய் செலவில் புதிய கட்டடங்கள் கட்டப்படும்l மாநிலத்தில் ஆடு, மாடுகளை மேய்க்க புலம் பெயரும் மக்களின் நலனுக்காக, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவர்களுக்காக புலம் பெயர்ந்த ஆடு மேய்ப்போர் மற்றும் அவர்களின் சொத்துகள் மீதான அடக்கு முறை தடுப்பு சட்டம் செயல்படுத்தப்படும்l கால்நடை மேய்ப்பவர்கள் இருக்கும் இடத்துக்கே சென்று, அவர்களின் ஆடு, மாடுகளுக்கு அரசு டாக்டர்கள் தடுப்பூசி போடுவர்

அடையாள அட்டை

l ஒரு இடத்தில் இருந்து, வேறு இடத்துக்கு கால்நடைகளை மேய்க்க செல்வோருக்கு, அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்l கால்நடை மேய்ப்பவர்களின் பிள்ளைகளுக்கு, உறைவிட பள்ளிகளில் இடம் அளிப்பதுடன், கல்வி உதவித்தொகை வழங்கப்படும்l புத்துார் கால்நடை மருத்துவ கல்லுாரி கட்டும் பணிகள் முடியும் கட்டத்தில் உள்ளது. நடப்பாண்டு கல்லுாரி செயல்பட துவங்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை