உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 20 ஆண்டுகளுக்கு முன் தலித் மக்கள் வாங்கிய கடன்: பஞ்சாபில் தள்ளுபடி

20 ஆண்டுகளுக்கு முன் தலித் மக்கள் வாங்கிய கடன்: பஞ்சாபில் தள்ளுபடி

சண்டிகர்:பஞ்சாபில், 20 ஆண்டுகளுக்கு முன், 4,727 தலித் குடும்பத்தினர் வாங்கிய கடன், 68 கோடி ரூபாயை, மாநில அரசு நேற்று தள்ளுபடி செய்தது.பஞ்சாபில், ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த பகவந்த் மான், முதல்வராக உள்ளார். அந்த மாநிலத்தில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பட்ஜெட் தாக்கலின் போது, மாநில நிதியமைச்சர் ஹர்பால் சிங் சீமா, 'பஞ்சாப் மாநில எஸ்.சி., பிரிவினர் நில அபிவிருத்தி மற்றும் நிதி கார்ப்பரேஷனில், தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள் வாங்கியிருந்த, 68 கோடி ரூபாய் மதிப்பிலான கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்' என அறிவித்தார்.இந்நிலையில், முதல்வர் பகவந்த் மான் தலைமையில் நேற்று கூடிய மாநில அமைச்சரவை கூட்டத்தில், அந்த அறிவிப்பு, செயல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. கூட்டத்திற்கு பின், பத்திரிகையாளர்களை சந்தித்த முதல்வர் மான், கூறியதாவது:மாநில நிதியமைச்சர் ஹர்பால் சிங் சீமா, தன் பட்ஜெட் உரையில் குறிப்பிட்டது போல, 4,727 தலித் குடும்பத்தினர் வாங்கியிருந்த, 68 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. இதற்கான முடிவு, அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டது.எஸ்.சி., பிரிவினர் நில அபிவிருத்தி மற்றும் நிதி கழகத்தில் கடன் பெற்ற தலித் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு, கடந்த, 20 ஆண்டுகளாக பெரும் சுமையாக இருந்த இந்த கடன் தொகை முழுவதும் தள்ளுபடி செய்யப்படுகிறது.இதன் மூலம், பட்ஜெட் அறிவிப்பு செயல்படுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.உடனிருந்த மாநில நிதியமைச்சர் சீமா பேசும் போது,''இதற்கு முன், இந்த மாநிலத்தில் ஆட்சியில் இருந்த அகாலி தளம் - பாஜ., கூட்டணி அரசு மற்றும் காங்., அரசுகள், தலித் மக்களின் கடனை தள்ளுபடி செய்யவில்லை. எங்களின் ஆம் ஆத்மி அரசு தான் தள்ளுபடி செய்துள்ளது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை