உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆணுறை பாக்கெட்டில் கட்சி சின்னம்: அரசியல் கட்சிகளின் அடாவடி ஐடியா

ஆணுறை பாக்கெட்டில் கட்சி சின்னம்: அரசியல் கட்சிகளின் அடாவடி ஐடியா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அமராவதி: ஆந்திராவில் லோக்சபா தேர்தலோடு சட்டசபை தேர்தலும் நடப்பதால் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. அதிலொரு பகுதியாக ஆளும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சியின் சின்னம் மற்றும் பெயர் அச்சிடப்பட்ட ஆணுறை பாக்கெட்டுகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.இன்னும் ஓரிரு மாதங்களில் லோக்சபா தேர்தல் துவங்கிவிடும் சூழலில் அரசியல் கட்சிகள் ஒருபக்கம் கூட்டணி பேச்சு, தொகுதி பங்கீடு என பிஸியாக இருக்கின்றன. மறுபக்கம், பிரசாரங்களில் புதுமையை புகுத்த திட்டமிட்டு வருகின்றன. அந்த வகையில், ஆந்திராவில் ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியும், எதிர்க்கட்சியான தெலுங்கு தேசமும் வித்தியாசமான முறையில் கட்சியின் சின்னத்தை மக்களிடம் கொண்டு செல்ல ஆணுறை அட்டை பெட்டியில் தங்களது கட்சி சின்னத்தை பதிவிட்டுள்ளன. ஆந்திராவில் லோக்சபா தேர்தலுடன், சட்டசபை தேர்தலும் நடப்பதால் இந்த யுக்தியை கையில் எடுத்துள்ளனர்.ஆந்திராவில் ஆணுறைகள் மிக அதிகமாக விற்பனை செய்யப்படுவதாக கூறப்படும் நிலையில் ஆணுறைகளை பிரசார கருவியாக அம்மாநில அரசியல் கட்சிகள் பயன்படுத்தி வருகின்றன. இரண்டு முக்கிய கட்சிகள் தங்கள் கட்சியின் சின்னங்களை ஆணுறையில் அச்சிட மிகப்பெரிய அளவில் பணம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தங்கள் கட்சி சின்னத்துடன் கூடிய ஆணுறைகளை இலவசமாக விநியோகம் செய்யவும் அரசியல் கட்சிகள் திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Ramesh Sargam
பிப் 24, 2024 00:52

கேவலமான சிந்தனை. கேடுகெட்ட அரசியல் வியாதிகள். அவர்களுக்கு ஆதரவு தரும் புத்திகெட்ட மக்கள்.


vbs manian
பிப் 23, 2024 20:37

ஆந்திரா முன்னோடி எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள்.


B MAADHAVAN
பிப் 23, 2024 18:01

இங்கே திராவிஷக் காரர்கள் சரக்கு + பிரியாணியோடு கொஞ்சம் பணம் சேர்த்துக் கொடுப்பார்கள். அங்கே நல்ல சுய விளம்பரத்துடன் கூடிய உறையுடன் சேர்த்து இன்னும் நாட்டின் வளர்ச்சிக்கு என்னவெல்லாம் கொடுக்கப் போகிறார்களோ .. தெரியவில்லை. ஆண்டவன் தான் நம் பாரத தேசத்தை காப்பாற்ற வேண்டும்..


J.V. Iyer
பிப் 23, 2024 16:02

டாஸ்மாக் சாராய பாட்டில்களில்? குழியும், குண்டுமாய் உள்ள சாலைகளில்? கொடுக்கும் கையூட்டுகளில்? மின்சார வெட்டில்? மக்கள் மயங்கி வோட்டுப்போடுவார்கள்.


Velan Iyengaar
பிப் 23, 2024 15:09

இதுக்கு எல்லாம் ரூம் போட்டு யோசிப்பிச்சிருப்பானுங்களோ?? அடிப்படை விஷயத்துல மனச செலுத்தினர் ...........மனச மட்டுமா செலுத்தினர்??


duruvasar
பிப் 23, 2024 14:58

இப்ப தமிழ்நாட்டில் பெயர் வைக்கிற ட்ரெண்டு படி பார்த்தால் நம்ம ஊரில் இதற்க்கு எந்த பெயர் வைப்பார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கும்


Velan Iyengaar
பிப் 23, 2024 15:10

ஹா ஹா ஹா .....


Seshan Thirumaliruncholai
பிப் 23, 2024 14:38

ஆணுறை ஆண்கள் வாக்குகள் பெறுவது. பெண்கள் வாக்குகள் பெற?


Velan Iyengaar
பிப் 23, 2024 15:07

இத கட்சியிடம் தான் கேக்கணும் அவர்கள் தான் இதில் நிபுணர்கள்


Jysenn
பிப் 23, 2024 13:03

Andhra is ahead of Diravida Model when it comes to innovative ideas.


குமார்நாயுடு
பிப் 23, 2024 12:07

இது ஒரு பொய்யான செய்தி...


தர்மராஜ் தங்கரத்தினம்
பிப் 23, 2024 12:01

கட்சி சின்னத்தைப் பார்த்து மூடு போயிட்டா???


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி