உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தமிழகத்தில் வேட்பாளர் செலவு தொகை ரூ.95 லட்சமாக உயர்த்தி அறிவிப்பு

தமிழகத்தில் வேட்பாளர் செலவு தொகை ரூ.95 லட்சமாக உயர்த்தி அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் வேட்பாளர் செலவினம் ரூ.95 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.இந்தியாவில் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் ஏப்.,19ம் தேதி ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், லோக்சபா தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து சென்னையில் இருந்து காணொளி வாயிலாக, மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆலோசனை நடத்தினார். https://www.youtube.com/embed/WFoiaVUlUqoஅப்போது லோக்சபா தேர்தலுக்கான ஏற்பாடுகள், வேட்பு மனு தாக்கல் தொடர்பாக அதிகாரிகளுடன் சத்யபிரதா சாகு ஆலோசனை மேற்கொண்டார். பின்னர், லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் வேட்பாளர் செலவினம் ரூ.95 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார். அதேபோல் தமிழகத்தில் சட்டசபை தொகுதிக்கு வேட்பாளர் செலவினம் ரூ. 40 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலின் போது, ரூ. 70 லட்சமாக வேட்பாளர் செலவினம் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Dharmavaan
மார் 19, 2024 03:20

Ivan nermaiyaana athigari illai matrapada vendum


R Kay
மார் 19, 2024 00:21

காமெடி பண்ணாதீங்க சார்


Madhu
மார் 18, 2024 20:16

வேட்பாளர் தேர்தல் செலவினத்தை உயர்த்துவதால், அரசியல் கட்சிகள் மேலும் ஊழலில்தான் ஈடுபடும்...ஒவ்வொரு தேர்தலுக்கும் குறைத்துக் கொண்டே வர வேண்டும். அப்போதுதான் கொள்கைக்கான பிரச்சாரம் நோக்கி அரசியல் கட்சிகள் நகரும். 1967லும் தேர்தல் நடந்துள்ளது இப்போதுள்ளபடி கோடிக்கணக்கில் அரசியல் கட்சிகள் புரளவில்லையே... மேலும் அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளரை தேர்ந்தெடுக்கும் செலவு யாவற்றையும் வேட்பு மனு தாக்கல் செய்பவரிடமே கறந்து விடுகின்றன.


குமரி குருவி
மார் 18, 2024 18:38

தேர்தல் போட்டியில் வெல்ல குறைந்த பட்சம் நூறு கோடியாகவும் அதிக பட்சம் 300 கோடிகளாம் ஆபீஸர்...


தமிழன்
மார் 18, 2024 18:21

95 லட்சம் ஒவ்வொரு ஒரு மணி நேரத்துக்குத்தானே பாஸ்?


வெகுளி
மார் 18, 2024 17:32

என்ன சார் இப்படி சொல்லிடீங்க... ஐநூறு கோடிக்கு மேல லாட்டரி பரிசு கிடைச்சிருக்கு சார்....


ஆரூர் ரங்
மார் 18, 2024 17:08

இவ்வளவு செலவிடப் போகும் தியாகிகளுக்கு சிரம் தாழ்ந்த???? வணக்கங்கள்.


Dharmavaan
மார் 18, 2024 16:22

000


R GANAPATHI SUBRAMANIAN
மார் 18, 2024 15:57

2024 ன் மிக பெரிய காமெடி. 95 லட்சமாக உயர்த்தப்பட்ட தேர்தல் செலவு.


Shankar
மார் 18, 2024 15:52

95 லட்சம் செலவு செய்யும் வேட்பாளர் எப்படி ஜெயிக்க முடியும்? அதுவும் தமிழகத்தில்??? ஓட்டுக்கு துட்டு கொடுக்கவே இந்த தொகை பத்தாதே?


மேலும் செய்திகள்