உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / லோக்சபா சபாநாயகர் தேர்தல்: பா.ஜ.வுக்கு ஜெகன் கட்சி ஆதரவு

லோக்சபா சபாநாயகர் தேர்தல்: பா.ஜ.வுக்கு ஜெகன் கட்சி ஆதரவு

அமராவதி: பார்லிமென்ட் லோக்சபா தேர்தலில் பா.ஜ,வுக்கு ஆதரவு அளிக்கப்போவதாக ஓய்.எஸ்.ஆர். காங்., தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பா.ஜ., தலைமையிலான தே.ஜ. கூட்டணி மீண்டும் ஆட்சியை கைபற்றியது. புதிய லோக்சபா சபாநாயகர் பதவிக்கு ஆளும் பா.ஜ. கூட்டணி சார்பில் ஓம்பிர்லாவும், இண்டியா கூட்டணி சார்பில் கொடிக்குன்னில் சுரேஷ் என்பவரும் போட்டியிடுவதால், முதன்முறையாக தேர்தல் நாளை நடக்கிறது. இத் தேர்தலில் பா.ஜ.விற்கு ஆதரவு அளிப்பதாக ஆந்திராவின் ஓய்.எஸ். காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். இக்கட்சிக்கு லோக்சபாவில் 4 எம்.பி.,க்கள்உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

theruvasagan
ஜூன் 26, 2024 10:31

பின்னே. உருப்படாத Indi கூட்டணி கூட சகவாசம் வைத்துக் கொள்வேன் என்றா சொல்லுவார்.


RajK
ஜூன் 26, 2024 09:33

அவர் செய்வது சந்திரபாபு நாயுடுவுக்கு விடப்படும் எச்சரிக்கை. ஒருவேளை சந்திரபாபு நாயுடு பிஜேபிக்கான ஆதரவை வாபஸ் வாங்கினால் ஜெகன் ஆதரவு கொடுப்பார் என்பதற்கு மறைமுகமான மிரட்டல் தான் இது.


தாமரை மலர்கிறது
ஜூன் 26, 2024 00:23

தேர்தலுக்கு முன்னரே, பிஜேபிக்கு ஆதரவு கொடுத்திருந்தால், இப்படி பதவி இழந்திருக்க வேண்டிய அவசியம் இருக்குமா?


S. Gopalakrishnan
ஜூன் 25, 2024 23:55

இரண்டு நாட்கள் முன்பு சவடால் பேசியது என்ன ஆயிற்று ?


அரசு
ஜூன் 25, 2024 22:46

பாராளுமன்றத் தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி கூட்டணியால் தோல்வியை தழுவிய இவர், பாரதீய ஜனதா கட்சியின் சபாநாயகர் வேட்பாளரை ஆதரித்து வாக்களிக்கப் போகிறாரம். சேர்த்து வைத்து இருக்கும் சொத்துக்களைப் பாதுகாக்க இது தான் சிறந்த வழி. வெட்கக்கேடு.


N Sasikumar Yadhav
ஜூன் 26, 2024 09:05

உங்க திராவிட மாடல் எம்பிக்களே பாஜகவை ஆதரிக்கபோகிறார்கள் அப்படியிருக்க இங்கே எதற்காக புலம்புகிறீர்


rao
ஜூன் 25, 2024 22:24

Good decision taken by Jagan.


Ramesh Sargam
ஜூன் 25, 2024 22:09

பா.ஜ.க. இவர நம்பவே கூடாது. கிட்டவே சேர்க்கக்கூடாது.


இளந்திரையன் வேலந்தாவளம்
ஜூன் 25, 2024 22:02

அது... போடு அருவாள


P Sundaramurthy
ஜூன் 25, 2024 21:44

மானம் கெட்டவர்கள்


மேலும் செய்திகள்









புதிய வீடியோ