உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கர்நாடகாவில் லோக்ஆயுக்தா ரெய்டு: 11 அதிகாரிகளிடம் ரூ. 45 கோடி பறிமுதல்

கர்நாடகாவில் லோக்ஆயுக்தா ரெய்டு: 11 அதிகாரிகளிடம் ரூ. 45 கோடி பறிமுதல்

பெங்களூரு: கர்நாடகாவில் ஒரே நேரத்தில் லோக் ஆயுக்தா போலீசார் ரெய்டு நடத்தி ரூ. 45 கோடி ரொக்கப்பணத்தை பறிமுதல் செய்தனர்.கர்நாடகாவில் பல்வேறு துறை அரசு உயரதிகாரிகள் மீது ஊழல் புகார்கள் எழுந்ததையடுத்து, நேற்று லோக் ஆயுக்தா போலீசார் 9 மாவட்டங்களில் 56 இடங்களில், ஒரே நேரத்தில் ரெய்டு நடத்தினர். மொத்தம் 100-க்கும் மேற்பட்ட அதிகாரிகளின் இல்லங்களில் இந்த ரெய்டு நடந்ததாக கூறப்படுகிறது. இதில் 11 உயரதிகாரிகளிடம் கணக்கில் வராத ரூ. 45 கோடி ரொக்கப்பணத்தை லோக் ஆயுக்தா போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஆவணங்களையும் கைப்பற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Kasimani Baskaran
ஜூலை 12, 2024 05:26

தமிழகத்தில் இது போல கனவிலும் கூட நடக்காது. தமிழகத்தில் லோக் ஆயுக்தாவும் கிடயாது அப்படியே மத்திய விசாரணை அமைப்புக்கள் உள்ளே வர முயன்றாலும் தமிழக அரசே சிபிஐ வரக்கூடாது என்று ஆணை பிறப்பிக்கும். அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் சேர்ந்து கொள்ளை அடித்தால் நாடு பொட்டல்க் காடாகிவிடுமே தவிர சுபிட்சம் வராது.


நிக்கோல்தாம்சன்
ஜூலை 12, 2024 02:56

காங்கிரஸ் அரசு ஆட்சிக்கு வந்தபின்னர் வெளிநாட்டு வந்தேறிகளின் ஆட்டம் தாலுக்கா அளவில் உள்ள அலுவலகங்களில் மிகப்பெரிய ஊழலை வெளிப்படுத்துகிறது , காவல் துறை அதிகாரிகளோ விவசாயிகளின் வயலை வளைத்து வளைத்து போட்டு ஸ்விமிங் பூல் , மதுபான விடுதியாகவே வயல்வெளிகளை மாற்றி வருகின்றனர் , விவசாயிகளின் வாழ்க்கை இதுபோன்ற அதிகாரிகளின் கைகளில் நினைக்கையில் பயமாக இருக்கிறது


மேலும் செய்திகள்









புதிய வீடியோ