உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கெஜ்ரிவால் மீது நம்பிக்கை இல்லை: ஆம் ஆத்மியிலிருந்து எம்.எல்.ஏ.,க்கள் 7 பேர் விலகல்

கெஜ்ரிவால் மீது நம்பிக்கை இல்லை: ஆம் ஆத்மியிலிருந்து எம்.எல்.ஏ.,க்கள் 7 பேர் விலகல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லி சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக, ஆம் ஆத்மியிலிருந்து 7 எம்.எல்.ஏ.க்கள் விலகினர்.டில்லியில் வரும் பிப்.5 ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. பிப்.8ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட உள்ளன. இந்த நிலையில் இன்று டில்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியிலிருந்து 7 எம்.எல்.ஏ.,க்கள் விலகியது. டில்லி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.டில்லி சட்டமன்றத் தேர்தலுக்கு ஒரு வாரத்திற்கும் குறைவான நேரத்தில், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பெரும் அடியாக பார்க்கப்படுகிறது. இது குறித்து ஆம் ஆத்மி பாலம் எம்.எல்.ஏ., பாவனா கவுர், கெஜ்ரிவாலுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=tx26nom2&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0உங்கள் மீதும், கட்சியின் மீதும் நம்பிக்கை இழந்துவிட்டதால், ஆம் ஆத்மி கட்சியின் முதன்மை உறுப்பினர் பதவியிலிருந்து நான் ராஜினாமா செய்கிறேன். தயவுசெய்து அதை ஏற்றுக்கொள்ளுங்கள். நான், திரிலோக்புரி எம்.எல்.ஏ., ரோஹித் மெஹ்ரௌலியா, ஜனக்புரி எம்.எல்.ஏ., ராஜேஷ் ரிஷி, கஸ்தூர்பா நகர் எம்.எல்.ஏ., மதன் லால், மெஹ்ரௌலி எம்.எல்.ஏ., நரேஷ் யாதவ்,ஆதர்ஷ் நகரைச் சேர்ந்த பவன் சர்மா மற்றும் பிஜ்வாசனைச் சேர்ந்த பி.எஸ். ஜூன் ஆகிய ஏழு எம்.எல்.ஏ.,க்கள் இன்று கட்சியிலிருந்து முதன்மை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்கிறோம்.இவ்வாறு பாவனா கவுர் கடிதத்தில் கூறியுள்ளார்.இந்த சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் 2025 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட ஆம் ஆத்மி கட்சி டிக்கெட் வழங்காதவர்கள். இந்த அனைத்து தொகுதிகளிலிருந்தும் கட்சி புதிய முகங்களை நிறுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த 7 பேரும் கட்சியிலிருந்து விலகி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

N.Purushothaman
பிப் 01, 2025 08:09

கெஜ்ரிவாலின் பேச்சும் செயலும் அருவருக்கத்தக்க வகையில் இருக்கும் போது கட்சி எம் எல் ஏ க்கள் வேறென்ன செய்வாங்க ? உடனே அவிங்களுக்கு இரண்டாம் முறை போட்டியிட வாய்ப்பு கொடுக்கலைங்கிற மொக்கை காரணத்தை தொடர்புபடுத்த என்ன வேண்டி கெடக்கு ? அப்படி பார்த்தால் கெஜ்ரி மட்டும் மூன்று முறை போட்டியிட்டு முதல்வராகலாமா ? காரணம் அது இல்லை ...கெஜ்ரியின் நடவடிக்கை சொந்த ஆட்சியில் உள்ளவர்களையே கொந்தளிக்க வைத்துள்ளது ....அது தான் உண்மை ...


ஜெய்ஹிந்த்புரம்
பிப் 01, 2025 01:23

பாஜாகா தேர்தல் செலவு 1737 கோடின்னு கணக்கு எழுதி இருக்கிறார்கள். அந்த செலவில் இதுவும் சேர்த்தியா என்றால் இல்லைன்னு தான் சொல்லணும். யமுனை அசுத்தம் ஆயிடிச்சுன்னு அமீத் சாவுக்கு கவலையாம். ஹா ஹா.


தாமரை மலர்கிறது
ஜன 31, 2025 21:34

இது வெறும் டீசர் தான். தேர்தல் ரிசல்ட் வந்ததும், ஒட்டுமொத்த ஆம் ஆத்மீ பிஜேபியில் இணைந்துவிடுவார்கள்.


sankaranarayanan
ஜன 31, 2025 21:16

சப்த ரிஷிகளின் பின்னணி என்னவென்றே தெரியவில்லையே இவர்களின் ஆதாரவால் பாஜக தில்லியை பிடித்தாற்போலத்தானாகும் இனி கெஜ்ரி என்னதான் எகிறி எகிறி கூச்சலிட்டாலும் எடுபடாது


Barakat Ali
ஜன 31, 2025 20:34

இதன் பின்னணியில் பாஜக இருக்குன்னு சொல்ற சார்கள் சீமானின் கட்சி தேய்வதில் எங்க கட்சி இருக்கு ன்னு உண்மையை ஒப்புக்கொள்வதில்லை ...


பேசும் தமிழன்
ஜன 31, 2025 20:19

கான் கிராஸ் கட்சியை எதிர்த்து தொடங்கப்பட்ட கட்சி ஆம் ஆத்மி.... பிறகு அதே கான் கிராஸ் கட்சியுடன் சேர்ந்து கொண்டு... இந்தி கூட்டணி என்ற பெயரில் கூத்து அடித்தால்.... யார் தான் ஒப்புக் கொள்வார்கள்.... அதனால் தான் மக்கள் வச்சி செய்து விட்டார்கள்.


AMLA ASOKAN
ஜன 31, 2025 20:16

இந்த 7 பேருக்கும் சூடு சொரணை இன்று காலை தான் பார்சலில் வந்தது . இவர்களது MLA காலம் எல்லாம் முடிந்து விட்டது . ஏமாந்துபோன குடிமகன்கள் என்பதைவிட தகுதி அற்றவர்கள் .


veera
ஜன 31, 2025 20:35

கூடிய விரைவில் திமுக கூட்டணியிலேயும் இது போல நடக்குமா?


V வைகுண்டேஸ்வரன்,chennai
ஜன 31, 2025 21:58

அ(மல) அசோகா. இப்படிதான் உன் daleevaru 10 ரூவா சே பா பற்றி இல்லாததும் பொல்லாததும் சொல்லி அப்புறம் கட்சி மாறியதும் பவர்ஃபுல் அமைச்சர் ஆக்கியது. இது கேவலத்தை விட கேவலம்


Ramesh Sargam
ஜன 31, 2025 19:48

கூண்டோடு walkout.


கல்யாணராமன்
ஜன 31, 2025 19:31

மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் கடைசி கட்டத்தில் ராஜினாமா செய்கிறார்கள். ஒண்ணாம் நெம்பர் அயோக்கியர்கள் சீட் கொடுத்திருந்தால் அங்கேயே இருந்திருப்பார்கள்.


Duruvesan
ஜன 31, 2025 19:00

கெஜ்ரி சார் ஜெயிக்கணும்னா, உங்க நண்பர் விடியல் சார் பிரச்சாரம் செய்யணும், அப்பால உங்க இஷ்டம்


ராம் சென்னை
ஜன 31, 2025 20:09

விடியலுக்கு இந்தி தெரியாது அவர் எப்படி பிரச்சாரம் செய்வாரு. ஹிந்தி தெரியாது போடான்னு சொல்லுவாரோ.


பேசும் தமிழன்
ஜன 31, 2025 20:20

ஆனாலும் உங்களுக்கு குசும்பு அதிகம்..... விடியாத தலைவர்.... இந்தி தெரியாது போடா என்று t-shirt போட்டு கொண்டு போய் பிரசாரம் செய்தால் போதும்..... சுத்தம்.... விளங்கிடும் !!!


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை