உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக எம்.சுந்தர் நியமனம்

மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக எம்.சுந்தர் நியமனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி:மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம். சுந்தரை நியமிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம். சுந்தரை நியமித்ததாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக தற்போது பணியாற்றி வரும் நீதிபதி கெம்பையா சோமசேகர் செப்டம்பர் 14, 2025 அன்று ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, நீதிபதி எம். சுந்தர் மணிப்பூர் தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்பார்.இது தொடர்பாக சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது:செப்டம்பர் 11 அன்று, சுப்ரீம்கோர்ட் கொலீஜியம் மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நீதிபதி சுந்தரை நியமிக்க பரிந்துரைத்தது. அதன்படி ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.இவ்வாறு அர்ஜூன் ராம் மேக்வால் பதிவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

நிக்கோல்தாம்சன்
செப் 14, 2025 06:47

இவரை பற்றிய மேலதிக தகவல்களுக்கு ....


rama adhavan
செப் 14, 2025 02:46

வாழ்த்துக்கள் நீதி அரசரே.