மேலும் செய்திகள்
வெ.இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி; இந்தியா இன்னிங்ஸ் வெற்றி
7 hour(s) ago | 2
துர்கா சிலைகளுடன் குளத்தில் டிராக்டர் கவிழ்ந்து 11 பேர் பலி
13 hour(s) ago
பெங்களூரு: “இரண்டு மொழி கற்பிக்கும் பள்ளிகளைத் துவக்க, மாநில அரசு திட்டமிட்டுள்ளது,” என, தொடக்க, உயர்நிலை பள்ளி கல்வித்துறை அமைச்சர் மது பங்காரப்பா தெரிவித்தார்.சட்டசபை கேள்வி நேரத்தில், பா.ஜ., உறுப்பினர் அரக ஞானேந்திரா கேள்விக்கு பதிலளித்து, அமைச்சர் மது பங்காரப்பா கூறியதாவது:தற்போது ஆங்கில வழி கல்விக்கு, அதிக டிமாண்ட் உள்ளது. பெரும்பாலான பெற்றோர், தங்களின் குழந்தைகளை ஆங்கில வழி கல்வியில் கற்பிக்க விரும்புகின்றனர். இதுவும் கூட, அரசு பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைய காரணமாகிறது.அரசு பள்ளிகளில், இரண்டு மொழி கற்பிக்கும் பள்ளிகள் படிப்படியாக துவக்கப்படுகின்றன. 2019 - 20ம் ஆண்டில் 30; 2020 - 21ல் 59 இரண்டு மொழி கற்பிக்கும் பள்ளிகள் துவக்கப்பட்டன. இவற்றில் தீர்த்தஹள்ளியில், 15 பள்ளிகள் திறக்கப்பட்டன.இரண்டு மொழி கல்வி கற்பிக்கும் பள்ளிகளுக்கு, தேவையான ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர். இவர்களுக்கு திறன் பயிற்சி அளிக்கப்படும். இதன் மூலம் சிறார்களுக்கு, தரமான கல்வி வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
7 hour(s) ago | 2
13 hour(s) ago