உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மத்திய பிரதேசத்தில் வீட்டில் பற்றியது தீ; 2 குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தினர் 4 பேர் பலி

மத்திய பிரதேசத்தில் வீட்டில் பற்றியது தீ; 2 குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தினர் 4 பேர் பலி

போபால்: மத்திய பிரதேசத்தில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.மத்திய பிரதேசம் மாநிலம், தேவாஸ் மாவட்டத்தில் உள்ள நயாபுரா பகுதியில் உள்ள வீடு ஒன்றில் 2 குழந்தைகள் உட்பட கணவன், மனைவி உறங்கி கொண்டு இருந்தனர். இன்று (டிச.,21) அதிகாலை 4.45 மணி அளவில் தீ பற்றியது. இதில் 2 குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.தீ விபத்தில் உயிரிழந்த 4 பேரின் உடலை மீட்டு போலீசார் பிரதேச பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: இந்த சம்பவத்தில் நான்கு பேர் இறந்தனர். மேலும் விசாரணை நடந்து வருகிறது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை