உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இப்படி, அப்படி மாத்தி மாத்தி மிதிக்கணும்! மாவை காலால் மிதித்து மோமோஸ் ரெடி பண்ணும் வியாபாரி

இப்படி, அப்படி மாத்தி மாத்தி மிதிக்கணும்! மாவை காலால் மிதித்து மோமோஸ் ரெடி பண்ணும் வியாபாரி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

போபால்: மத்தியபிரதேசத்தில் மோமோஸ் தின்பண்டம் தயாரிக்க மாவை காலால் ஒருவர் மிதிக்கும் வீடியோ பார்ப்போரை உவ்வே சொல்ல வைத்துள்ளது.

மோமோஸ் தின்பண்டம்

விதவிதமான தின்பண்டங்களை விரும்பாதவர்கள் யாரும் இருக்க முடியாது. மாலைநேரம் வந்துவிட்டால் ஸ்நாக்ஸ் டைம் என்று குதூகலித்து சாலையோரங்களில் கடை, கடையாக தேடி வித்தியாசமான தின்பண்டங்களை சுவைப்பவர்கள் அதிகம். அப்படியான நபராக இருப்பவர்களை சற்றே எச்சரிக்கும் வகையில் மோமோஸ் தயாரிக்கும் ஒரு வீடியோ ஒன்று வெளியாகி பார்ப்போரை உவ்வே சொல்ல வைத்து இருக்கிறது. அந்த வீடியோவில் மாவை காலால் மிதித்து, மிதித்து தயார் செய்வதே இந்த உவ்வேக்கு காரணம்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=w6jctpov&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

பிரபலமான கடை

மத்தியபிரதேச மாநிலத்தில் பர்கி போலீஸ் ஸ்டேஷன் அருகில் சாலையோர கடை ஒன்று உள்ளது. ராஜஸ்தானைச் சேர்ந்த ராஜ்ஸ்குமார் கோஸ்வாமி, சச்சின் கோஸ்வாமி என்ற இருவரும் இந்த கடையின் உரிமையாளர்கள். இவர்களின் மோமோஸ் அந்த பகுதியில் ஏக பிரபலம்.

காலில் மிதி

இவர்கள் கடையில் மோமோஸ் தயாரிக்கும் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் உள்ளாடை மட்டுமே அணிந்த ஒருவர், பெரிய பாத்திரம் ஒன்றில் இருக்கும் மாவை பிசைகிறார். ஆனால் ஒரு வித்தியாசம், கைகளுக்கு பதிலாக காலை பயன்படுத்தி அப்படி ஒரு மிதி, அப்புறம் இப்படி ஒரு மிதி என்று மாவை பிசைந்து தள்ளுகிறார்.

சீல் வைக்க வேண்டும்

வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்போரை அதிர வைத்துள்ளது. அவர்கள் மனிதர்களே அல்ல, சிறைக்கு அனுப்ப வேண்டிய நபர்கள் என்றும், இருவரின் சாலையோர கடைக்கு அதிகாரிகள் சீல் வைக்க வேண்டும் என்றும் கமெண்டுகளை பதிவிட்டு உள்ளனர்.

தவிர்ப்பது நலம்

இதனிடையே வீடியோ வைரலான நிலையில் இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். சாலையோர கடைகளில் சுகாதாரம் என்பது பெரும்பாலும் இருக்குமா என்பதை உறுதி செய்ய முடியாது, எனவே இது போன்ற கடைகளில் சாப்பிடுவதை தவிர்ப்பது நலம் என்று அறிவுறுத்துகின்றனர் சுகாதாரத்துறை அதிகாரிகள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
செப் 10, 2024 10:28

இதுபோல் தான் பேல் பூரி அதன் ரசம் போன்ற பானம் தயாரிப்பு விற்பனை எல்லாம். வெளியில் வாங்கும் உணவு பொருட்கள் அது எவ்வளவு பெரிய உணவகமாக இருந்தாலும் சுகாதாரம் குறைவாகத்தான் இருக்கும்.


அப்பாவி
செப் 09, 2024 21:13

மிதிச்சு பிசையும் முன்னாடி காலை நல்லா சோப் போட்டு கழுவிட்டுத் தான் மிதிப்பாரு. ம.பி ல ஆரோக்கியம் முக்கியம்னு டபுள் இஞ்சின் சர்க்கார் தீவிரமா தீயா வேலை செய்யுது. உதர் சப் டீக் ஹை.


theruvasagan
செப் 09, 2024 20:50

கண்டதையும் கண்ட இடத்தில் வாங்கித் திங்க ஆண் பெண் பெரிசு சிறிசு அடங்கலும் இங்க பெரிய கூட்டமே இருக்கு. அடுப்பங்கரையில பூனைய தூங்கவிட்டுட்டு காலை மாலை அர்த்தராத்திரி எந்நேரமானாலும் எதைத் திங்கலாம்னு அலைஞ்சுகிட்டே இருக்கும். அதுகளுக்கு சுத்தம் சுவை சுகாதாரம் எதுமே முக்கியமில்லை. வெளியில திங்கணும். நோகாம நொங்கு எடுக்கணும் என்பதுதான் ஒரே குறிக்கோள்.


Rasheel
செப் 09, 2024 19:32

உணவில் துப்புவது, அழுகி போன மாட்டு, நாய் மாமிசம், கழுவாத விளக்கமாரால் ரோஸ்ட தோசை, சீனா பெருங்காயம், பல நாட்கள் பயன் படுத்திய கருப்பு கலர் எண்ணெய், மனிதனின் வேர்வை துடைக்காமல், கைகழுவாமல் உணவு சமைப்பது ஆகியவை மிக பெரிய மற்றும் சிறிய உணவங்களில் மிக சாதாரணம்.


சாம்
செப் 09, 2024 18:41

பெருமையா இருக்கு.. மால் ல திங்கும் போது...


இறைவி
செப் 09, 2024 17:28

இதற்குத்தான் நமது சனாதன தர்மம் தேவை இன்றி வெளியில் சாப்பிடாதே. காரணம் சமையல் செய்பவர்களின் சுத்தம் தவிர சமைக்கும்போது அவர்களின் மனநிலை கூட நம் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்று வழி காட்டியது. இதன் காரணமாகவே முன்பு ஊருக்கு ஊர் தர்ம சத்திரம் அமைத்திருந்தார்கள். அவைகள் அரசரின் நேரடி கண்காணிப்பில் இருக்கும். அதுவன்றி ஓர் மக்கள் அதிதி என்று விருந்தினர் யாரும் வருகிறார்களா என்று காத்திருந்து முதலில் அவர்களுக்கு உணவு அளிப்பார்கள். அதிதி உபசரிப்பு என்பது தெய்வ பூஜையை போல முக்கியத்துவம் வாய்ந்தது. இன்று நாம் பகுத்தறிவு பெற்று வியாதிகளை விலைக்கு வாங்கிக் கொண்டிருக்கிறோம்.


Rasheel
செப் 10, 2024 12:15

நல்லதை சொன்னீர்கள். பகுத்தறிவு காக்கா பிரியாணி அளவிற்கு கொண்டு சென்று விட்டது. உணவில் சில மனிதர்கள் கருத்தடை மாத்திரைகள் கலப்பதாக கேள்வி.


J.V. Iyer
செப் 09, 2024 17:06

வெளியில் வாங்கும் உணவில் காரி துப்பினாலும், காலால் மிதித்தாலும் வாங்கும் கூட்டம் இருந்தால், விஷத்தையும் கலக்கும். எனவே ருசியாக இருக்கு என்று கண்ட இடத்தில் உணவை வாங்காதீர்கள்.


SANKAR
செப் 09, 2024 16:55

in Europe multiple women crush grapes with legs to produce wine


Indian
செப் 09, 2024 18:09

போ நீ போய் தின்னு .


God yes Godyes
செப் 09, 2024 15:52

மிதிக்கும் போது ....... அதற்கு உப்பு தேவை இல்லை.உப்பு கரிப்பா ருசியா இருக்கும்