உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மசூதியில் மதரஸா; மத்திய அரசு வாதம்

மசூதியில் மதரஸா; மத்திய அரசு வாதம்

பெங்களூரு; ஸ்ரீரங்கப்பட்டணாவில் உள்ள ஜும்மா மசூதியில் உள்ள மதரஸாவை காலி செய்யுமாறு மாண்டியா மாவட்ட கலெக்டர் மற்றும் அரசுக்கு உத்தரவிடுமாறு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது.மதரஸாவின் நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவை, தலைமை நீதிபதி என்.வி.அஞ்சாரியா, நீதிபதி கே.வி.அரவிந்த் அமர்வு விசாரித்தது.மத்திய அரசு தரப்பில் வாதிட்ட கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் அரவிந்த் காமத், ''ஜும்மா மசூதி 1951ம் ஆண்டில் பாதுகாக்கப்பட்ட நினைவு சின்னமாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அங்கு மதரஸா செயல்பாடுகள் நடக்கிறது. இதை தடை செய்தால், சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்பதால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, மசூதியில் உள்ள மதரஸாவை காலி செய்ய மாவட்ட கலெக்டருக்கு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்,'' என்று கேட்டுக்கொண்டார்.இதற்கு மாநில அரசு மற்றும் வக்பு வாரியம் சார்பில் வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள், 'வக்பு வாரிய சொத்தாக, 1963ல், மசூதி அறிவிக்கப்பட்டது. திப்பு சுல்தான், ஷஹீத்தை வக்பு சொத்து என்று அறிவித்தார். அதன்படி, வக்பு வாரிய சொத்தில் மதரஸா செயல்பாடு அனுமதிக்கப்படுகிறது' என்றனர்.இதன்பின் வழக்கு விசாரணை வரும் 20ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை