உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மதராஸி முகாம் மக்கள் போராட்டம்

மதராஸி முகாம் மக்கள் போராட்டம்

டில்லி ஜங்புராவில் அமைந்துள்ள மதராஸி முகாம் குடிசைப்பகுதியில், 50 ஆண்டுகளாக வசிக்கும் தமிழர்களுக்கு, 50 கி.மீ., துாரத்தில் நரேலாவில் மாற்று இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், வாழ்வாதாரம், குழந்தைகளின் கல்வி ஆகியவற்றால் மாற்று இடத்துக்கு செல்ல முடியாது என மதராஸி முகாம் மக்கள் கூறினர். டில்லி நகர்ப்புற தங்குமிட மேம்பாட்டு வாரிய விதிமுறைப்படி, 5 கி.மீ., சுற்றளவில் மாற்று இடம் வழங்க கோரிக்கை விடுத்தனர். ஆனால், மதராஸி முகாமில் உள்ள வீடுகளை காலி செய்ய டில்லி மேம்பாட்டு ஆணையம் நெருக்கடியை அதிகரித்துள்ளது. இதைக் கண்டித்து, மதராஸி முகாம் மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். போலீசார் அவர்களை குண்டுக்கட்டாக துாக்கி கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை