உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மகா கும்பமேளா: புனித நீராடிய பக்தர்கள் எண்ணிக்கை 10 கோடியை தாண்டியது

மகா கும்பமேளா: புனித நீராடிய பக்தர்கள் எண்ணிக்கை 10 கோடியை தாண்டியது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பிரயாக்ராஜ்: மகா கும்ப மேளாவில் இதுவரை புனித நீராடிய யாத்ரீகர்களின் எண்ணிக்கை 10 கோடியை கடந்துள்ளதாக, உ.பி., அரசு தெரிவித்துள்ளது.ஜனவரி 13ம் தேதி தொடங்கி பிப்ரவரி 26ம் தேதி வரை நடைபெறும் இந்த விழா முன்னிட்டு, உலகம் முழுவதும் இருந்து திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவதற்காக, பக்தர்கள் வந்த வண்ணம் இருக்கிறார்கள்.இது குறித்து இன்று 23ம் தேதி உ.பி., அரசு அளித்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:இன்று மதியம் 12 மணி நிலவரப்படி இதுவரை புனித நீராட வந்த பக்தர்களின் எண்ணிக்கை, 10 கோடியை தாண்டியது. இன்று மட்டும், மதியம் 12 மணிக்குள் 30 லட்சம் பேர் சங்கமத்தில் நீராடினர். அதிகபட்சமாக மகர சங்கராந்தி பண்டிகையின் போது (சுமார் 3.5 கோடி) பக்தர்கள் புனித நீராடினர். 1.7 கோடிக்கும் அதிகமானோர் பவுஷ் பூர்ணிமா விழாவில் பங்கேற்றனர்.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கோடிக்கணக்கான பக்தர்கள் வந்து சென்றாலும், பிரயாக்ராஜ் நகரத்தில் அன்றாட வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க பாதிப்பு எதுவும் இல்லை. பள்ளிகள், அலுவலகங்கள் மற்றும் வணிகங்கள் தொடர்ந்து வழக்கம் போல் உள்ளன. மாவட்ட நிர்வாகம் முக்கிய நீராட்டு விழா நாட்களில் மட்டுமே கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

vivek
ஜன 24, 2025 09:27

கழுதைக்கு தெரியுமா கற்பூரம் வாசனை....


J.Isaac
ஜன 24, 2025 07:03

குருட்டு பூனை விட்டத்தில் பாய்ந்தது போல


சோழநாடன்
ஜன 23, 2025 22:53

10 கோடி பேர் நீராடினார்கள் என்ற செய்தியால் இந்தியாவிற்கு விளையப்போகும் நன்மை என்ன? 10 ஆயிரம் கோடிக்கு தீபாவளிக்கு வெடிவெடித்து காற்றை மாசுப்படுத்துவதில் என்ன கலாச்சராம் இருக்கிறது? மத உணர்வுகளை நிறுவனமயமாக்கவே இதுபோன்ற நிகழ்வுகள் பயன்படும்.


கிஜன்
ஜன 23, 2025 22:06

10 கோடி பேருக்கு 70 ஆயிரம் தட்டு கொடுத்து .... பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுத்த மாமேதைகள் ...


Mediagoons
ஜன 23, 2025 21:25

புனித நீர் என்று பட்டம் கொடுத்தது யார்?


gokul
ஜன 23, 2025 20:55

மொதல்ல கனடா சாக்கடை அடைப்பை எடுக்கணும்


திகழ்ஓவியன்
ஜன 23, 2025 20:03

அப்ப தண்ணீர் பயங்கர கலீஜ் ஆகி இருக்கும் , இதனால் நோய் ஏதும் வாராமல் இருந்தால் சரி , அனால் அதற்கு தான் கோமியமும் சாணி இருக்கே


N Sasikumar Yadhav
ஜன 23, 2025 21:02

கோபாலபுர கொத்தடிமையான உமக்கு எதற்கு அந்த கவலை . உமக்கு கோபாலபுர சாராய ஆறு ஓடுகிறது . தமிழக திராவிட மாடல் சாராய கடைகளில் அனைத்து சாராய ஆறுகளும் சங்கமிக்கின்றன. நீங்க அதில் நீராடலாம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை