உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மஹா., தோல்விக்கு காரணம் முன்னாள் தலைமை நீதிபதி

மஹா., தோல்விக்கு காரணம் முன்னாள் தலைமை நீதிபதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: “மஹாராஷ்டிராவில் கட்சி மாறிய அரசியல்வாதிகளுக்கு, சட்டம் குறித்த பயத்தை முன்னாள் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் ஏற்படுத்தியிருந்தால், இங்கு அரசியல் களமே மாறியிருக்கும்,'' என, உத்தவ் தாக்கரே சிவசேனாவின் எம்.பி., சஞ்சய் ராவத் குற்றஞ்சாட்டியுள்ளார். மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலில், பா.ஜ., தலைமையிலான மஹாயுதி கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. 'இண்டி' கூட்டணிக்கு, 50 இடங்கள் மட்டுமே கிடைத்தன.இந்த தோல்வி குறித்து, சிவசேனா உத்தவ் தாக்கரே கட்சி எம்.பி., சஞ்சய் ராவத் நேற்று கூறியதாவது:மஹாராஷ்டிராவில் கட்சி தாவும் அரசியல்வாதிகளுக்கு சிறிதும் பய உணர்வே ஏற்படாத சூழ்நிலையை உருவாக்கியவர் உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட். சிவசேனா தாக்கல் செய்த எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள் தகுதிநீக்க வழக்கில் அவர் எந்த முடிவும் எடுக்கவில்லை. இதனால்தான் கட்சி தாவிய அரசியல்வாதிகளுக்கு துணிச்சல் வந்துவிட்டது. இந்திய அரசியல் வரலாற்றில் டி.ஒய். சந்திரசூட் பெயர், கருப்பு எழுத்துகளால் எழுதப்பட வேண்டும்.சிவசேனாவை விட்டு ஓடிப்போனவர்களை தகுதி நீக்கம் செய்யக்கோரிய வழக்கை அவர் உரிய நேரத்தில் விசாரித்திருந்தால் மஹாராஷ்டிராவின் அரசியல் களமே வேறு மாதிரியாக இருந்திருக்கும். மஹாராஷ்டிராவின் முதல்வர் யார் என்பதை குஜராத் லாபிதான் இன்று முடிவு செய்கிறது. எனவே, முதல்வர் பதவியேற்பு விழாவை குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி விளையாட்டு மைதானத்தில் நடத்தலாம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

seeven traders
டிச 02, 2024 10:35

மகாராஷ்டிரா துரோகி சஞ்சய் ரக்ஷா.


RUKMANI RAO
நவ 28, 2024 09:25

ஆட தெரியாதவர்கு தெரு கொணல் என்பது போல முந்தய நீதி அரசரை குறை கூறுவதில் என்ன பயன்?


ellar
நவ 26, 2024 21:16

சார் ஒரு நிமிஷம் .....நீங்க சேர்ந்து இருக்கிற கூட்டணி கட்சியினுடைய முடிவு எல்லாம் டெல்லியில் தானே எடுப்பாங்க? அது பாக்குறப்போ மகாராஷ்டிராவில் இருந்து குஜராத் பக்கம் தானே அப்ப கொஞ்சம் செலவு குறையும் இல்ல ..... அதனால டெல்லியில் எடுக்கிற முடிவுக்கு முன் குஜராத்தில் எடுக்க முடிவு ரொம்ப வித்தியாசமா இருக்காதில்லைங்க... ஏன் சீரிஸாக எடுத்துக்குறீங்க?


Dharmavaan
நவ 26, 2024 18:45

பால் தாக்கரே ஏற்படுத்திய பிஜேபி உறவை கெடுத்து உத்தவுக்கு யோசனை சொல்லும் சகுனி சஞ்சய் ராவத்


M Ramachandran
நவ 26, 2024 17:26

ஒன்றுமில்லை இத்தாலியா கும்பலை விரட்டி விட்டு இந்திய நாட்டு ப்ரஜைய்யகளை காங்கிரஸ் தலை வராக்குங்கள். காங்கரஸ் நிமிர்ந்து நிற்கும் சரியான எதிர்கட்சி ஸ்தானத்தில் நாடு நலன் பற்றி நினைத்து நடக்கும்.


Sivakumar
நவ 26, 2024 21:33

மல்லிகார்ஜுன கார்கே உங்க கூற்று படி எந்த நட்டு பிரஜையாம் ? நட்டா எந்த விதத்தில் பிஜேபி தலைவராக தேர்வாகி தொடர்கிறாரோ அதே விதத்தில்தான் மல்லிகார்ஜுன கார்கேயும்


SRIDHAAR.R
நவ 26, 2024 07:20

இந்த ஆள் ஏன் தவளை மாதிரி கதறுகிறார்


Mohan
நவ 25, 2024 18:54

உத்தவ் தாக்கரின் அரசியல் வாழ்வை குழிதோண்டி புதைப்பது இந்த சஞ்சய் ராவுத்துதான். உஷார் உத்தவ்.


Mohan
நவ 25, 2024 18:51

உத்தவுதாக்கரி உன்னுடைய அரசியல் வாழ்க்கையை குழி தோண்டி புதைப்பவரே இந்த சஞ்சய்ராவத்தான். உஷார்.


Gopal
நவ 25, 2024 17:21

ஒரே புகையா இருக்கே. எங்கெந்து வரது - ஓஹோ வயதில் இருந்து வரது.


Jbmadhavan Jbmadhavan
நவ 25, 2024 16:56

55 சட்ட மன்ற உறுப்பினர்களில் 16 பேர்களை வைத்து கொண்டு நாங்கள் தான் உண்மை கட்சி என்றால் எப்படி ஒத்துக்கொள்ள முடியும்.தந்தையின் கொள்கைகளை காற்றில் பறக்க விட்டு பதவிக்காக சேரா இடம் சேர்ந்தால் இப்படித்தான் ஆகும்.அடுத்தவர் மீது பழி போட்டு உபயோகம் இல்லை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை