உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பெண்களுக்கு மாதம் ரூ.3000 மஹா விகாஸ் அகாடி வாக்குறுதி

பெண்களுக்கு மாதம் ரூ.3000 மஹா விகாஸ் அகாடி வாக்குறுதி

மும்பை : மஹாராஷ்டிராவில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில், சிவசேனா, பா.ஜ., - தேசியவாத காங்., அடங்கிய, 'மஹாயுதி' கூட்டணி ஆட்சி நடக்கிறது. 288 சட்டசபை தொகுதிகளுடைய இம்மாநிலத்தில், நவ., 20ல் தேர்தல் நடக்கிறது; நவ., 23ல் ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது.இந்த தேர்தலில், ஆளும் மஹாயுதி கூட்டணிக்கும், எதிர்க்கட்சியான உத்தவ் தாக்கரேயின் சிவசேனா, காங்., - சரத் பவாரின் தேசியவாத காங்., அடங்கிய, 'மஹா விகாஸ் அகாடி' கூட்டணிக்கும் இடையே பலத்த போட்டி நிலவுகிறது.இந்நிலையில், மும்பையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், மஹா விகாஸ் அகாடி கூட்டணியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது.அதில், பெண்களுக்கு மாதம் 3000 ரூபாய்; அரசு போக்குவரத்து பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம்; விவசாயிகளுக்கு 3 லட்சம் ரூபாய் வரை கடன் தள்ளுபடி; வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் 4000 ரூபாய் உதவித்தொகை, 25 லட்சம் ரூபாய் வரையிலான உடல்நலக் காப்பீடு போன்ற வாக்குறுதிகள் இடம் பெற்றுள்ளன.'தேர்தலில் மீண்டும் வென்றால், பெண்களுக்கு மாதம் வழங்கப்படும் உதவித்தொகை, 1500ல் இருந்து 2100 ரூபாயாக உயர்த்தப்படும்' என, ஆளும் மஹாயுதி கூட்டணியின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

பேசும் தமிழன்
நவ 07, 2024 08:52

பப்பு.... அப்படியே ஆளுக்கு ரெண்டு கப்பல்.... ரெண்டு ட்ரைன் கொடுப்போம் என்று அடித்து விடு..... ஆனால் ஒன்று... நீங்கள் என்ன தான் போலி காந்தி பெயரை வைத்து கொண்டு வந்தாலும்... நாட்டு மக்கள் உங்கள் இத்தாலி குடும்பத்தை நம்ப தயாராக இல்லை......வேண்டுமானால் உங்கள் ஊழல் இண்டி கூட்டணி... உங்கள் அபிமான பாகிஸ்தான் நாட்டில் முயற்சி செய்து பார்க்கலாம்.. அங்கே உங்களுக்கு ஆதரவளிக்கும் ஆட்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.


பேசும் தமிழன்
நவ 07, 2024 08:45

அவர்கள் தமிழக மக்களை போல் ஏமாளிகள் அல்ல.... வீர சிவாஜியின் வழி வந்தவர்கள்.... அவர்களை இப்படி எதையாவது சொல்லி ஏமாற்ற முடியாது.


RAJ
நவ 07, 2024 08:18

மக்கள் வரிப்பணம்தானே .. அள்ளிவிடு... வீரசிவாஜி பிறந்தமண் .. யாருக்கு ஒட்டு போடணும்னு மக்களுக்கு தெரியும்..


Smba
நவ 07, 2024 08:04

அப்படியே இலவசமா .....


Kanns
நவ 07, 2024 07:05

Other than Providing All Jobs only Minm Wages from Labourer to President, Recover Entire& All 90% UnDue Freebies/Concessions from Concerned Parties Without Any Stays by Court-Judges& Credit into Govt Accounts


Kanns
நவ 07, 2024 07:03

Recover Entire& All 90% UnDue Freebies/ Concessions from Concerned Parties Without Any Stays by Court-Judges& Credit into Govt Accounts


vadivelu
நவ 07, 2024 06:58

இப்படியே சென்றால், இனி மக்கள் வேலைக்கே செல்ல வேண்டாம், அரசே உங்களுக்கு தேவையானவைகளை கொடுக்கும் என்று சொல்லி விடலாம்.


KRISHNAN R
நவ 07, 2024 06:29

மிக மோசமான.ஒரு வியாதியை.. முன் மாதிரியை.. ஒருவர்.. தேர்தல் ஓட்டுக்கு.. வழங்கிவிட்டு...எல்லாரும்... அதே பின் பற்றினால்...நாடு உருபடாது.


Kasimani Baskaran
நவ 07, 2024 05:47

நேற்றுதான் திவாலாகும் அளவுக்கு உதவி என்ற பெயரில் கஜானாவை பொதுமக்களுக்கு இலவசங்கள் பெயரில் திறந்துவிடக்கூடாது என்று காங்கிரஸ் தலைமை பசப்பியது. இன்று மறுபடியும் அதே தவறை கூட்டனியுடன் சேர்ந்து வெட்கமில்லாமல் செய்கிறது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை