உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அரசு பணத்தை திருடி காதலிக்கு சொகுசு பங்களா பரிசு: தலைமறைவான ஒப்பந்த ஊழியருக்கு வலைவீச்சு

அரசு பணத்தை திருடி காதலிக்கு சொகுசு பங்களா பரிசு: தலைமறைவான ஒப்பந்த ஊழியருக்கு வலைவீச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: ஒப்பந்த ஊழியராக பணிபுரியும் ஊழியர் ஒருவர் அரசின் ரூ.21.5 கோடி திருடி, காதலிக்கு சொகுசு பங்களா பரிசளித்ததுடன், சொகுசு கார், விலை உயர்ந்த டூவீலர் வாங்கியது தெரியவந்துள்ளது. தலைமறைவான அவரை போலீசார் தேடி வருகின்றனர்.மஹாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜிநகர் மாவட்டத்தில் விளையாட்டு ஆணையத்தில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிபவர் ஹர்ஷ்குமார் ஷிர்சாகர். இவரது மாத சம்பளம் 13 ஆயிரம் ரூபாய் மட்டும். ஆனால், அவர் கடந்த சில நாட்களாக சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதாக புகார் எழுந்தது.இது குறித்து விசாரணையில் அவரிடம் சொகுசு கார், விலை உயர்ந்த பைக் இருப்பதும், , விமான நிலையம் அருகே 4 பிஎச்கே பிளாட் ஒன்றை வாங்கி காதலிக்கு பரிசு அளித்ததும் தெரியவந்தது. இதற்கான பணம் எப்படி கிடைத்தது என்பது பற்றி தொடர்ந்து விசாரணை நடந்தது. அதில் விளையாட்டு ஆணையத்தின் நிதியில் இருந்து 21 கோடியே 59 லட்சத்து 38 ஆயிரம் ரூபாயை 'நெட் பேங்கிங்' மூலம் திருடியது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையறிந்த ஹர்ஷ்குமார் ஷிர்சாகர் சொகுசு காருடன் தலைமறைவானார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.இந்த விசாரணையில், மற்றொரு பெண் ஊழியர் ஒருவர் ரூ.35 லட்சம் திருடியதும் தெரியவந்துள்ளது. இது குறித்து உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Ganapathy Subramanian
டிச 27, 2024 17:21

காதலியின் கணவருக்கு தான் நடத்திய செஸ் போட்டியின் வீடியோ எடுக்கும் கான்ட்ராக்ட்டையும் கொடுத்தார்.


R S BALA
டிச 26, 2024 19:56

திருடுகிறவன் எத்தனை நாள் தப்பிக்க முடியும் பல நாள் திருடன் ஒருநாள் மாட்டிக் கொண்டான் இனி வாழ்நாளெல்லாம் இவனுக்கு நிம்மதி இருக்காது. உண்மையில் நேர்மை மட்டுமே ஒவ்வொரு தனிமனிதனுக்கும் அழியா சொத்து..


Mahendran Puru
டிச 26, 2024 07:29

ஆஹா ஆஹாஹா இது மூடி கட்சி ஆளும் மராட்டிய மாநிலத்தில் தம்பிகளா.


N.Purushothaman
டிச 26, 2024 07:15

அரசு பணத்தை எடுத்து காதலிக்கு பங்களா ...சூப்பரப்பு ......நெட் பாங்கிங் மூலம் பணத்தை மாற்ற கூடிய அளவிற்கு அவனுக்கு எப்படி அதிகாரம் வந்தது ?


அப்பாவி
டிச 26, 2024 07:03

கேலோ இந்தியா... எல்லிரும் பூந்து வெளையாடுங்க. சௌக்கிதார் ஹை க்யா?


நிக்கோல்தாம்சன்
டிச 26, 2024 06:30

என்னது விளையாட்டுத்துறையா ??


Kumar Kumzi
டிச 26, 2024 02:02

விளையாட்டுத்துறை சம்பந்தம் பட்ட பிரச்சினையா இருக்கே அப்போ நம்பிள் ஓங்கோல் சின்னவரின் பங்கு நிச்சயமா இருக்கும்


raja
டிச 26, 2024 01:41

மக்கள் பணத்தை எடுத்து இங்கே ஒருத்தரு காதலிக்கு கார் பந்தயம் நடத்துறாரு...


ஜெய்ஹிந்த்புரம்
டிச 25, 2024 23:29

ஜெய் மஹாராஷ்டிரா.. பாஜாக க்கு புது நிர்வாகி கிடைத்துவிட்டார். ஏதாவது துணை கமிட்டிக்கு தலைவனாக்கிடுவாங்க.


yuva Kanish
டிச 25, 2024 22:35

அதெப்படிப்பா... 1000 கரெண்ட் பில் கட்டதாவனை fuse புடுங்கும் அரசாங்கம்.... 21 கோடி வரை திருட விடுது.... ? ஓ.... டிஜிட்டல் இண்டியாவா


புதிய வீடியோ