ஏக்நாத் ஷிண்டே எக்ஸ் தள பக்கத்தை முடக்கிய ஹேக்கர்கள்: பாக், துருக்கி கொடிகளை வெளியிட்டு அத்துமீறல்
மும்பை: மஹாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயின் எக்ஸ் தள பக்கம் ஹேக்கர்களால் முடக்கம் செய்யப்பட்டது.மஹாராஷ்டிராவின் துணை முதல்வராக இருக்கும் ஏக்நாத் ஷிண்டே தமது அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதள பக்கத்தில் மிகுந்த ஆக்டிவ்வாக இருக்கக்கூடியவர். இவரின் எக்ஸ் வலைதள பக்கத்தை தற்போது ஹேக்கர்கள் முடக்கி இருக்கின்றனர்.மேலும், அவரின் பக்கத்தில் பாகிஸ்தான், துருக்கி ஆகிய நாடுகளின் கொடிகளையும் பதிவேற்றி பறக்கவிட்டுள்ளனர். இவ்விரு நாடுகளின் போட்டோக்களையும் நேரலையாக வெளியிட்டு, கைவரிசை காட்டி இருக்கின்றனர். இதையறிந்த துணை முதல்வர் அலுவலக அதிகாரிகள், உடனடியாக சைபர் க்ரைம் போலீசாருக்கு தகவல் கொடுத்து, எச்சரித்தனர். சிறிது நேரத்துக்கு தொழில்நுட்ப வல்லுநர்களின் துரித நடவடிக்கைக்கு பின்னர், கணக்கு மீட்டெடுக்கப்பட்டுள்ளது, எக்ஸ் வலைதளம் வழக்கம் போல் இயங்கி வருகிறது என்று அவர்கள் கூறினர்.