உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / லோக்சபாவில் அப்படி! சட்டசபையில் இப்படி! மஹா., தேர்தலில் முடிவை மாற்றிய மக்கள்!

லோக்சபாவில் அப்படி! சட்டசபையில் இப்படி! மஹா., தேர்தலில் முடிவை மாற்றிய மக்கள்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: லோக்சபா தேர்தலில், மஹாராஷ்டிராவில் எதிர்க்கட்சிகளுக்கு கை கொடுத்த வாக்காளர்கள், சட்டசபை தேர்தலில் ஆளுங்கட்சியை அரியணையை வழங்கி உள்ளனர்.மக்கள் மனநிலை என்பது எப்போதும் நிரந்தரமானது அல்ல; அது, மாநிலத்துக்கு மாநிலம் மாறும்; மாதம் தோறும் கூட மாறும் என்பதை இப்போது நடந்து முடிந்துள்ள சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=4zq3zrvd&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சமீபத்தில் நடந்த (2024ம் ஆண்டு) லோக்சபா தேர்தலில் மஹாராஷ்டிராவில் மொத்தம் உள்ள 48 தொகுதிகளில் பா.ஜ.,வின் மகாயுதி கூட்டணி 17 தொகுதிகளில் மட்டும் வென்றது. அதே நேரத்தில் எதிர்க்கட்சிகளின் கூட்டணியான மகா விகாஸ் அகாதி கூட்டணி 30 தொகுதிகளை அள்ளியது. எஞ்சிய ஒரு தொகுதியில் ஒரேயொரு சுயேட்சை (காங்கிரஸ் ஆதரவு) வென்றார்.இந்த தேர்தல் நடந்து கிட்டத்தட்ட சரியாக 6 மாதங்கள் கழித்து நடைபெற்ற சட்டசபை தேர்தலில் மக்களின் மனநிலை முற்றிலும் மாறிவிட்டது. கடந்த முறை எதிர்க்கட்சிகளுக்கு அதிக ஆதரவு தெரிவித்த அதே வாக்காளர்கள், இம்முறை உல்டாவாக, ஆளும்கட்சிக்கு ஆதரவு அளித்து அரியணை வழங்கி இருக்கின்றனர்.அதாவது, 6 மாதம் முன்பு முடிந்த லோக்சபா தேர்தலில் ஆளும்கட்சி கூட்டணிக்கு நோ சொன்ன வாக்காளர்கள், 180 நாட்கள் கழித்து அதே ஆளும்கட்சி கூட்டணிக்கு 'யெஸ்' சொல்லி இருக்கின்றனர். ஆளும் மகாயுதி கூட்டணியாக பா.ஜ., (149), முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா (போட்டியிட்டது 81 தொகுதிகள்), துணை முதல்வர் அஜித் பவார் (தேசியவாத காங். 59 தொகுதிகள்) களம் கண்டது. 2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் இதே கூட்டணியை ஆதரிக்காத வாக்காளர்கள், நடப்பு சட்டசபை தேர்தலில் வரவேற்றுள்ளனர். கிட்டத்தட்ட யாரும் எதிர்பார்க்காத வெற்றி விகிதாச்சாரத்தை அள்ளித் தந்திருக்கின்றனர். கட்சியின் முக்கிய வேட்பாளர்களுக்கு வெற்றியை பரிசளித்து இருக்கின்றனர். எதிர்க்கட்சிகளின் மகா விகாஸ் அகாடி கூட்டணியை ஓரம்கட்டி உள்ளனர். சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் ஆகிய 2 கட்சிகளும் பிளவுப்பட்டு காணப்படும் சூழலில் நடந்த முதல் சட்டசபைத் தேர்தலில் மிக தெளிவாக ஆளும்கட்சியை ஆதரித்து உள்ளனர். மக்களின் மாறுபட்ட இந்த தீர்ப்பை பா.ஜ., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வரவேற்றுள்ளன. அதே சமயம், வழக்கம் போல் எதிர்க்கட்சிக் கூட்டணி புகார் ராகம் பாடி வருகிறது. தேர்தல் முடிவுகளில் ஏதோ மர்மம் இருக்கிறது. இந்த முடிவுகளை ஏற்றுக் கொள்ள மாட்டோம், மக்களும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்று வெளிப்படையாக அறிவித்தும் இருக்கிறது. எதுவானாலும், மக்களின் தீர்ப்பு இதுதான், ஏற்றுக் கொள்வதே சிறந்த அரசியல் பண்பாடு என்று வெற்றியை ருசித்துள்ள பா.ஜ., மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் கூறி உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Jagan (Proud Sangi)
நவ 23, 2024 21:52

RSS - சேர்ந்து இருந்தால் பிஜேபி ஜெயிக்கும் இல்லை என்றால் தோல்வி. ஹரியானா மஹா பாடம் - பிஜேபி புரிந்திருக்கும்


எஸ் எஸ்
நவ 23, 2024 18:32

இதேபோல் தமிழ்நாட்டிலும் 2026இல் 2024 லோக்சபா தேர்தல் முடிவுகளுக்கு மாறாக முடிவுகள் வரும்


Barakat Ali
நவ 23, 2024 19:25

தமிழகத்தில் அந்த விழிப்புணர்வு வர நூறு வருடங்களாவது ஆகும் ........


Sundar R
நவ 23, 2024 16:01

மகாராஷ்டிராவில் இண்டி வாஷ் அவுட் ஆனதற்கு மெயின் காரணம் ராகுல் காந்தி சத்ரபதி சிவாஜி மகாராஜ் அவர்களின் சிலையுடன் போஸ் கொடுக்க மறுத்து விட்டார். சிலையை நிறுவவும் மறுத்து விட்டார்.


Sivagiri
நவ 23, 2024 14:32

எங்கே இருந்து வேண்டுமானாலும் ரேஷன் பொருள்கள் வாங்கலாம் - - என்பது போல வாக்காளர்கள் , இந்தியாவிற்குள் எங்கே இருந்து வேண்டுமானாலும் வாக்களிக்கலாம் , என்ற வசதியை கொண்டுவர வேண்டும் , முழுமையான சோதனைக்கு பின் , எங்கே இருந்தும் வாக்களிக்கும் வசதியை கொடுக்க வேண்டும் , அப்படி செய்தால் , வாக்கு சதவீதம் அதிகரிக்கும் , , , அதே போல , நாடாளுமன்ற தேர்தலில் மட்டும் , தேர்தல் நாளுக்கு முந்தைய நாளும் பிந்தைய நாளும் , ஆக , மூன்று நாட்கள் , விடுமுறை அளிக்க வேண்டும் . . .


Kumaresan
நவ 23, 2024 14:30

ஜார்கண்டில் காங்கிரஸ் வெற்றி அங்கு வோட்டிங் மெசின் நன்றாக வேலை செய்தது, மஹாராஷ்டிராவில் தோல்வி அடைந்த காங்கிரசுக்கு வழக்கம் போல வோட்டிங் மெசின் நம்ப மாட்டார்கள்,


Yaro Oruvan
நவ 23, 2024 14:08

வழக்கம்போல EVM மேல பாஞ்சி பேராடுவானுவ.. ஜார்கண்ட்ல பாஜக அதே இருபத்தி அஞ்சு சீட் தக்க வச்சிருக்கு.. அதிகம் கிடைக்கும் என எதிர்பார்த்தார்கள் அது கிடைக்கவில்லை.. மற்றபடி அறுக்களோ தோல்வியோ இல்லை.. ஆனால் மகாராஷ்டிராவில் ?? உப்பிகளும் கான்+கிராஸ் கும்பலும் ஜெலுசில் வாங்க வரிசைல நிக்கிறானுவ.. இரண்டு கும்பல் உலகம்பூரா சண்டை போட்டுக்குவானுவ.. ஆனா இங்க மட்டும் சொல்லி வச்சி கும்பலா பாஜகவிற்கு எதிரா குத்துவானுவ .. மக்கள் உணர ஆரம்பித்துவிட்டார்கள் இனி நாமும் அதைப்போல பாஜகவிற்கு போட வேண்டும் என்று.. ஜைஹிந்.. மைனாரிட்டி ஒட்டு கும்பலை ஒழிக்க மெஜாரிட்டி ஒட்டு கும்பல் கட்டாயமாகிறது


SIVA
நவ 23, 2024 14:05

பாரளுபண்ற தேர்தலில் உட்கட்சி பூசல் எதிரொலிக்காது , ஆனால் சட்டசபை மற்றும் உள்ளாட்சி தேர்தலில் ட்கட்சி பூசல் முவதும் எதிரொலிக்கும் , காங்கிரஸ், சரத் பவார் காங்கிரஸ், உத்தவ் தாக்ரேய் ஒரு கூட்டணியில் இருந்தாலும் யாராவது ஒருவர் அதிக தொகுதியில் வெற்றி பெற்று பெரிய அளவில் கட்சியை வளர்த்து விடுவார்களோ என்ற பயம் அவர்களுக்குள் இருக்கும் ....


sundarsvpr
நவ 23, 2024 13:35

. மத்தியில் உள்ள எதிர்க்கட்சிகள் தோல்வியை ஒப்புக்கொண்டால்தான்தான் எதிர்க்கட்சிகள் மக்களை சந்திக்கமுடியும்.


Ram
நவ 23, 2024 13:31

பாராளுமன்ற தேர்தலில் R.S.S. , ப.ஜ.க. கூட்டணிக்கு வேலை செய்யவில்லை ஆனால் இப்போது R.S.S. ஆதரவு கெளுத்தது ஆகையால் தான் இந்த வெற்றி


CHELLAKRISHNAN S
நவ 23, 2024 12:31

in January 1980, parliament elections, mgr aiadmk won only two seats. but in June it got the majority seats. natural.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை