உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / திரிணமுல் காங்கிரஸ் பெண் எம்.பி. மஹுவா வாய் கொழுப்பு!

திரிணமுல் காங்கிரஸ் பெண் எம்.பி. மஹுவா வாய் கொழுப்பு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோல்கட்டா: வங்கதேசத்தினர் இந்தியாவுக்குள் ஊடுருவுவது மேற்கு வங்க அரசியலில் முக்கிய பிரச்னையாக உருவெடுத்துள்ள நிலையில், அதுபற்றி திரிணமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். “ இந்திய எல்லையை காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பி.எஸ்.எப். உள்ளிட்ட ஐந்து படைகள் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் வருகிறது. அதற்கு முழு பொறுப்பு உள்துறை அமைச்சர் அமித் ஷாதான். அப்படியிருக்க மேற்கு வங்க அரசை எப்படி பா.ஜ.வினர் குறை கூற முடியும்?” என மஹுவா ஆவேசமாக கேட்டார்.“ நான் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். அவர்கள் (பா.ஜ.) தொடர்ந்து ஊடுருவல் பற்றி பேசுகிறார்கள். நாட்டின் எல்லையை பாதுகாக்கும் பணியை 5 படைகள் செய்து வருகின்றன. அவை மத்திய உள்துறை அமைச்சரின் கட்டுப்பாட்டில் வருகின்றன.“ அப்படி இருக்கையில், ஆகஸ்ட் 15ம்தேதி செங்கோட்டையில் பிரதமர் மோடி ஊடுருவல் பற்றி பேசுகிறார். இதனால் நாட்டின் மக்கள் தொகையில் மாற்றம் ஏற்படுகிறது என்கிறார். அவர் இதைச் சொல்லும்போது ​​உள்துறை அமைச்சர் சிரித்து கொண்டே கைதட்டுகிறார்.“ ஊடுருவல்காரர்கள் தினமும் நம் நாட்டினுள் வந்து கொண்டிருக்கின்றனர். நம் அம்மாக்களையும், சகோதரிகளையும் மோசமான முறையில் பார்க்கிறார்கள்; நம் நிலங்களை அபகரிக்கிறார்கள் என்றால், இதற்கெல்லாம் யார் காரணம்?” என மஹுவா கேட்டார்.“ அமித் ஷாவின் தலையை வெட்டி உங்கள் (பிரதமர்) மேஜையில்தான் வைக்க வேண்டும். வேறு வழியில்லை. உள்துறை அமைச்சரும் உள்துறை அமைச்சகமும் நம் எல்லைகளை பாதுகாக்க தவறினால் அது யார் தவறு?எங்கள் தவறா? உங்கள் தவறா? பி.எஸ்.எப். என்னதான் செய்கிறது?” என்றார் மஹுவா. மஹுவா மொய்த்ராவின் பேச்சு பா.ஜ. தொண்டர்களை கொந்தளிக்க வைத்துள்ளது. சந்தீப் மஜும்தார் என்ற பா.ஜ. தொண்டர் மஹுவாவை கைது செய்யுமாறு போலீசில் புகார் அளித்தார்.மம்தாவின் தூண்டுதல்படிதான் மஹுவா இப்படி பேசியிருக்கிறார். இதுதான் திரிணமுல் காங்கிரசின் நிலைப்பாடா? என்பதை மம்தா விளக்க வேண்டும். மஹுவா மன்னிப்பு கேட்க மம்தா சொல்ல வேண்டும். இல்லையென்றால், அவரை கட்சியில் இருந்து நீக்க வேண்டும்” என பா.ஜ. தலைவர்கள் கூறுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 34 )

Thravisham
ஆக 31, 2025 05:27

இவளெலாம் அமிட்ஷாவை எதிர்ப்பது கேவலம்


ManiMurugan Murugan
ஆக 31, 2025 00:00

எல்லைப் பாதுகாப்பு படை வசம் 1000 கிமீ ஒப்படைகக வேண்டும் என்று பல ஆண்டுகளாக மாதங்களாக கோரிக்கை உள்ளது அதற்கு மம்தா ஒத்துக் கொள்ளவில்லை என்பது தானே செய்தி இவருக்கு நாட்டு நடப்பு தெரியாது போல


தர்மராஜ் தங்கரத்தினம்
ஆக 30, 2025 17:07

மஹுவா வை ஆதரிக்கும் கோல்மால்புர அடிமைகள் அவர் என்னென்ன பேசினார் என்று அறிய பொறுமையாக செய்தியைப் படிக்க வேண்டும் .....


Rathna
ஆக 30, 2025 16:14

கல்கட்டாவின் சில பகுதிகள், முர்ஷிதாபாத், மால்ட, பங்களாதேஷி எல்லையோரம் பல மாவட்டங்களில் உள்ளூர் பங்களாதேஷி, ரோஹிணிய கூட்டம் வீட்டில் காய போட்டுள்ள பழைய ஜட்டி, கிழிந்த பனியன், லுங்கி, குர்தா போன்றவற்றை திருடி கொண்டு ஓடி விடுகிறது. வீட்டில் உள்ள டிவி, மிக்ஸி, கிரைண்டர், காஸ் ஸ்டோவ் போன்றவற்றை திருட உள்ளேவரும் படை எடுப்பு பங்களாதேஷி கூட்டம் திருடுகிறது. உள்ளூர் காவல் துறை ஒன்னும் செய்ய முடியவில்லை. கேஸ் போட்டால் கூட்டு சேர்ந்து அடிக்கிறான். மாநிலத்தில் தங்கியுள்ள அரசியல்வாதிகள் அதிகாரத்தால் கேஸ்கள் வாபஸ் வாங்கபடுகிறது. இது தவிர ரம்ஜான் துர்கா பூஜை என்று சொல்லி பங்களாதேஷி மூரக்ஸ் கலெக்க்ஷன் செய்கிறான். இதை கேட்டால், கடையின் உள்ளே கூட்டமாக புகுந்து திருடுகிறான். ரயில்வே, வங்கி, பொது நிறுவன சொத்துக்களை உடைப்பதும் தினமும் நடக்கிறது. மிக கேவலமான காட்டுமிராண்டி ஆட்சி நடக்கிறது.


Rathna
ஆக 30, 2025 16:03

பங்களாதேஷி உறவு இங்குள்ள மூரக்ஸ் இங்கிருந்து ஊளை இடுவது ஒன்னும் ஆச்சரியம் அல்ல.


pakalavan
ஆக 30, 2025 15:56

அந்த பெண் பேசியது சரியே


Abdul Rahim
ஆக 30, 2025 14:25

வெல்டன் மகிவா அரசியல் சூரபத்மனை தண்டிப்பதில் தவறே இல்லை


krishna
ஆக 31, 2025 02:35

MIRUGA MOORGA ABDUL RAHIM UN KUMBALUKKU THALAI VETTUVADHU DESA VIRODHAM GUNDU VAIPPADHU THEEVIRAVAADHAM MATTUME ULAGAM MUZHUVADHUM THOZHIL.ULAGA MAHA KEVALA JENMANGAL.


Sangi Mangi
ஆக 30, 2025 13:39

திரிணமுல் காங்கிரஸ் பெண் எம்.பி. மஹுவா வாய் கொழுப்பு இப்படி சொல்ல உங்களுக்கு என்ன அதிகாரம்? பிஜேபி எம்பீ க்கள் பேசாத பேச்ச? அப்பல்லாம் நீங்க வாய் முடி மௌனியா இருந்த காரணம் என்னமோ?


Abdul Rahim
ஆக 30, 2025 14:20

மத்தியில் இவர்கள் ஆதரவு கட்சி ஆட்சியில் இருக்கும் அதிகாரம் தான் இப்படி வரிகள் வந்து விழுகின்றன


Muralidharan S
ஆக 30, 2025 13:12

மேற்கு வங்கம், தமிழகம், கேரளா, ஜம்மு காஷ்மீர், பஞ்சாப் மாநிலங்கள் மற்றும் அதில் இருக்கும் சில தேச விரோத கட்சிகள் - மிகவும் உன்னிப்பாக கூர்ந்து மத்திய உளவுத்துறை கொண்டு கண்காணிக்கப்படவேண்டிய மாநிலங்கள்... காசுக்காக எதையும் செய்யத்துணியும் நபர்களின் / கட்சிகளின் - தேச விரோத செயல்களை / செயல்பாடுகளை தினமலர் போன்ற நடுநிலை பத்திரிக்கைகள் மூலமாக படித்து வருகிறோமே....அதனால் சொல்கிறேன்..


Venugopal S
ஆக 30, 2025 13:02

உண்மையைத் தானே சொல்லி இருக்கிறார், நாங்களும் இதைத்தானே சொல்கிறோம். பங்களாதேஷ் உடனான நமது எல்லையைப் பாதுகாக்க துப்பில்லாத மத்திய பாஜக அரசு வெறும் வாய்ச் சவடால் பேர்வழிகள்!


புதிய வீடியோ