உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா /  போதை பொருள் வழக்கில் முக்கிய குற்றவாளி நாடு கடத்தல்!: சி.பி.ஐ., அதிரடி

 போதை பொருள் வழக்கில் முக்கிய குற்றவாளி நாடு கடத்தல்!: சி.பி.ஐ., அதிரடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: மஹாராஷ்டிராவில் உள்ள ஒரு தொழிற்சாலையில் இருந்து, 252 கோடி ரூபாய் மதிப்புள்ள, 'மெபெட்ரோன்' போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், ஐக்கிய அரபு எமிரேட்சில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளி குப்பாவாலா முஸ்தபா, மும்பைக்கு நேற்று அழைத்து வரப்பட்டார்.மஹாராஷ்டிராவின் சாங்லி மாவட்டத்தில் உள்ள ஒரு தொழிற்சாலையில், போதைப்பொருள் தயாரிக்கப்படுவதாக கிடைத்த தகவலின்படி, மும்பை போலீசார் கடந்த ஆண்டு சோதனை நடத்தினர்.அங்கிருந்து, 126.14 கிலோ எடையுள்ள மெபெட்ரோன் போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் சர்வதேச மதிப்பு, 252 கோடி ரூபாய்.

முக்கிய குற்றவாளி

விசாரணையில், மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சில் வசித்த, குஜராத்தின் சூரத் மாவட்டத்தைச் சேர்ந்த குப்பாவாலா முஸ்தபா, 44, அங்கிருந்தபடி, தன் உறவினரும், மற்றொரு முக்கிய குற்றவாளியுமான சலீம் டோலாவுடன் சேர்ந்து, மெபெட்ரோன் போதைப்பொருள் தயாரிப்பு தொழிற்சாலையை நடத்தியது தெரியவந்தது.மேலும், போதைப்பொருள் தயாரிப்பில் ஈடுபட்டதுடன், தங்களது நெட்வொர்க் வாயிலாக அதை இருவரும் வினியோகித்தனர். மஹாராஷ்டிரா மட்டுமின்றி குஜராத்தின் பெரும்பாலான இடங்களுக்கும் மெபெட்ரோன் போதைப்பொருளை இருவரும் கடத்தினர். இதில் கிடைத்த பணத்தை, ஹவாலா வாயிலாக வெளிநாடுகளுக்கு அவர்கள் அனுப்பியதும் விசாரணையில் தெரியவந்தது.இதுகுறித்து மும்பை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில், குப்பாவாலா முஸ்தபா, அவரது உறவினர் சலிம் டோலா, அவரது மகன் தாஹர் சலீம் டோலா உள்ளிட்டோரின் பெயர்கள் சேர்க்கப்பட்டன. மேலும் அவர்களுக்கு எதிராக, 'லுக் அவுட்' எனப்படும் தேடப்படும் நபர்கள் என்பதற்கான நோட்டீசும் வெளியிடப்பட்டது.இந்த வழக்கில், தாஹர் சலீம் டோலா, ஐக்கிய அரபு எமிரேட்சில் இருந்து ஜூனில் நம் நாட்டுக்கு நாடு கடத்தப்பட்டார்.

'ரெட் கார்னர் நோட்டீஸ்'

குப்பாவாலா முஸ்தபாவுக்கு எதிராக கைது வாரன்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில், மும்பை போலீசார் மற்றும் சி.பி.ஐ., அதிகாரிகள் கோரிக்கையின்படி, அவருக்கு எதிராக, 'இன்டர்போல்' எனப்படும் சர்வதேச போலீஸ் அமைப்பு, 'ரெட் கார்னர் நோட்டீஸ்' வெளியிட்டது. இந்நிலையில், ஐக்கிய அரபு எமிரேட்சில் முக்கிய குற்றவாளி குப்பாவாலா முஸ்தபாவை, ரெட் கார்னர் நோட்டீஸ் அடிப்படையில் அந்நாட்டு அதிகாரிகள் சமீபத்தில் கைது செய்தனர். அவரை நம் நாட்டுக்கு அழைத்து வர, கடந்த 7ல், துபாய்க்கு மும்பை போலீசார் சென்றனர்.நாடு கடத்துவதற்கான சட்ட நடவடிக்கைகள் முடிந்ததை அடுத்து, பலத்த பாதுகாப்புடன், மும்பை சத்ரபதி சிவாஜி மஹாராஜ் சர்வதேச விமான நிலையத்துக்கு குப்பாவாலா முஸ்தபா நேற்று அழைத்து வரப்பட்டார். அவரை அங்கேயே வைத்து மும்பை போலீசார் கைது செய்தனர்.நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளி குப்பாவாலா முஸ்தபா கைது செய்யப்பட்டு உள்ளதால், விரைவில் இதில் தொடர்புடையோர் கைது செய்யப்படுவர் என, போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கில் இதுவரை, 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

subramanian
ஜூலை 12, 2025 07:54

நீதிபதி, இவனுக்கு தண்டனை - இவன் செய்த போதை மருந்து மட்டும் சாப்பிட கொடுத்து விட்டு, வேறு எதுவும் சாப்பிட கொடுக்க கூடாது. குடிக்க தண்ணீர் கொடுக்க கூடாது. போதை பொருள் 100 கிலோ. 1000 கிலோ 24 மணி நேரம் சாப்பிட கொடுத்து , சாகும் வரை சிறையில் அடைக்க வேண்டும்.


கண்ணன்,மேலூர்
ஜூலை 12, 2025 06:14

பெயரைப் பார்த்தால் போதும் தரம் எளிதில் விளங்கும்.


Thravisham
ஜூலை 12, 2025 07:47

திருட்டு த்ரவிஷ தலைவர்களும் இதில் சிக்குவார்களா? கபில் சிபல் போன்ற வக்கீல்கள் இருக்கும் வரை குப்பா போன்ற மனித மிருகங்களுக்கு என்ன கவலை?


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜூலை 12, 2025 08:43

[இதில் கிடைத்த பணத்தை, ஹவாலா வாயிலாக வெளிநாடுகளுக்கு அவர்கள் அனுப்பியதும் விசாரணையில் தெரியவந்தது.] ஓகே ..... வெரிகுட் ..... அப்படியே நிம்மிம்மா வுக்கும் ஒரு பாராட்டுப்பத்திரம் வாசிச்சுருங்க .....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை