மேலும் செய்திகள்
தலைமை நீதிபதி மீது தாக்குதல்: முதல்வர் ஸ்டாலின், சோனியா கண்டனம்
1 hour(s) ago | 10
தலைமை நீதிபதி கவாயை தாக்க முயற்சி; சுப்ரீம் கோர்ட்டில் பரபரப்பு
5 hour(s) ago | 44
பீஹார் சட்டசபைக்கு 2 கட்டமாக தேர்தல்
8 hour(s) ago | 6
சபரிமலை: சபரிமலையில் இன்று(ஜன.,15) மகரஜோதி பெருவிழா நடைபெறுகிறது. சபரிமலையில் இன்று மகரஜோதி பெருவிழா நடைபெறுகிறது. பந்தளத்திலிருந்து புறப்பட்ட திருவாபரண பவனி இன்று மாலை 5:30 -க்கு சரங்குத்தி வந்தடையும். இங்கு திருவிதாங்கூர் தேவசம்போர்டு அதிகாரிகளின் வரவேற்புக்கு பின்னர் சன்னிதானத்துக்கு கொண்டுவரப்படும்.மாலை 6:20 மணிக்கு 18- படி வழியாக ஸ்ரீ கோயில் முன்புறம் வந்ததும் தந்திரியும், மேல்சாந்தியும் திருவாபரணத்தை வாங்கி நடை அடைத்து விக்ரகத்தில் ஆபரணங்கள் அணிவிப்பர். தொடர்ந்து நடைதிறந்து தீபாராதனை நடைபெறும். தீபாராதனை முடிந்து சில வினாடிகளில் பொன்னம்பலமேட்டில் மகரநட்சத்திரமும், தொடர்ந்து மகரஜோதி மூன்று முறையும் காட்சிதரும்.மதியம் 1:00 மணிக்கு நடை அடைக்கப்படும். மாலை 5:00 மணிக்கு நடை திறக்கப்படும். இடைப்பட்ட நேரத்தில் பக்தர்கள் 18 படிகள் ஏறுவதற்கு அனுமதி இல்லை.இரண்டு நாட்களாக இங்கு வந்த பக்தர்களில் பெரும்பகுதியினர் ஜோதி தரிசனத்துக்காக சன்னிதானத்தை சுற்றியுள்ள காடுகளில் போர்வை, மரக்கிளைகளால் தற்காலிக கூடாரங்கள் அமைத்து தங்கியுள்ளனர்.கட்டடங்கள், மரங்கள், மலைச் சரிவுகளில் பக்தர்கள் நின்று ஜோதி தரிசனம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜோதி தெரியும் இடங்களில் மூங்கில் கம்புகளால் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. இன்று காலை 9:00 மணி முதல் பத்தணந்திட்டா நிலக்கல் -பம்பை ரோட்டில் போக்குவரத்து கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. பம்பையில் இருந்து மதியத்துக்கு பின்னர்பக்தர்கள் சன்னிதானம் வர அனுமதிக்கப்பட மாட்டார்கள்.இரவு 8:00 மணிக்கு பின்னர் இவர்கள் மலை ஏறலாம். மகரஜோதி தரிசனம் முடிந்து பக்தர்கள் நிலக்கல் மற்றும் பிற வெளியூர்களுக்கு செல்ல வசதியாக 1200 கேரள அரசு பஸ்கள் தயார் நிலையில் உள்ளன.மகரவிளக்குக்கு முன்னோடியாக பிம்பசுத்தி பூஜையை நேற்று காலை கணபதி ேஹாமத்துக்கு பின்னரும், உச்சபூஜைக்கு முன்னரும் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு நடத்தினார்.பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்தும் வகையில் நான்கு எஸ்.பி., 19 டி.எஸ்.பி., 15 இன்ஸ்பெக்டர் உட்பட 1000 போலீசார் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளதாக டி.ஜி.பி., ஷேக் தர்வேஷ் சாஹிப் தெரிவித்தார்.
1 hour(s) ago | 10
5 hour(s) ago | 44
8 hour(s) ago | 6