உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சபரிமலையில் மூன்று முறை காட்சியளித்த மகரஜோதி :சாமியே சரணம் ஐயப்பா; பக்தர்கள் பரவசம்

சபரிமலையில் மூன்று முறை காட்சியளித்த மகரஜோதி :சாமியே சரணம் ஐயப்பா; பக்தர்கள் பரவசம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சபரிமலை: சபரிமலையில் இன்று (ஜன.,15) மகரஜோதி பெருவிழா நடைபெற்றது. பொன்னம்பலமேட்டில், மாலை 6.50 மணிக்கு தொடர்ந்து மூன்று முறை காட்சியளித்தது மகரஜோதி. தரிசனம் கண்டு பக்தர்கள் பரவசமடைந்தனர்.சபரிமலையில் இன்று மகரஜோதி பெருவிழா நடைபெற்றது. பந்தளத்திலிருந்து புறப்பட்ட திருவாபரண பவனி இன்று மாலை 5:30க்கு சரங்குத்தி வந்தடைந்தது. இங்கு திருவிதாங்கூர் தேவசம்போர்டு அதிகாரிகளின் வரவேற்புக்கு பின்னர் சன்னிதானத்துக்கு கொண்டுவரப்பட்டது. மாலை 6:20 மணிக்கு 18ம் படி வழியாக ஸ்ரீ கோயில் முன்புறம் வந்ததும் தந்திரியும், மேல்சாந்தியும் திருவாபரணத்தை வாங்கி நடை அடைத்து விக்ரகத்தில் ஆபரணங்கள் அணிவித்தனர். தொடர்ந்து நடை திறந்து தீபாராதனை நடைபெற்றது. தீபாராதனை முடிந்து சில வினாடிகளில் சன்னிதானத்தில் இருந்து 8 கி.மீ தொலைவில் உள்ள பொன்னம்பலமேட்டில் மகரநட்சத்திரமும், தொடர்ந்து மகரஜோதி மூன்று முறையும் காட்சி தந்தது. இதனை பார்த்த ஐயப்ப பக்தர்கள் பரவசத்துடன் வழிபட்டனர். அப்போது சுவாமியே சரணம் ஐயப்பா என கோஷம் எழுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Krishnan
ஜன 17, 2024 14:39

ஆன்மீகம் மனநிறைவு |


Krishnan
ஜன 17, 2024 14:37

ஆன்மீகம் பெருவழிப்பாதை புரிய வைக்கும்


Krishnan
ஜன 17, 2024 14:36

தயவு செய்து கடவுள் பக்தி இல்லாதவன் கடவுள் இல்லை என தயவு செய்து பதிவிடாதீர்கள் ஆன்மீகம் மாதா பிதா குரு தெய்வம் இதை முழுமையாக எந்த மனிதன் செய்கிறாரோ அவர் ஒருவனுக்கு ஒருத்தி எனவும் குடிப்பழக்கம் மற்றவரை அழித்து தான் வாழனும் என்ற எண்ணம் இல்லாமல் வாழ்வர் மனக்கவலை இன்றி இயற்கையோடு வாழ் வர் இது உண்மை வாழ்ந்து பார் தெரியும்.


சண்முகம்
ஜன 16, 2024 09:18

மூன்று முறை என்ன, முப்பது முறை கூட தெரியும்.


Ramesh Sargam
ஜன 16, 2024 00:24

ஸ்வாமியே சரணம் ஐயப்பா.


Ramesh
ஜன 15, 2024 23:20

The Magara Jothi event appears to be orchestrated by the Kerala government with the intention of extracting funds from devout Lord Ayyappa followers. The forest team is expected to stage the presentation of a fireball on the opposite side of the mountain, visible from the Ayyappa which needs to be stopped.


அப்புசாமி
ஜன 15, 2024 21:27

ஒரு நட்சத்திரம் எங்கேருந்தோ வந்துச்சு.


hari
ஜன 16, 2024 08:19

தேஞ்சு போன ரெகார்ட்..


Sami Sam
ஜன 15, 2024 19:10

மகரஜோதி தெரிந்தது என்பதை மகரவிளக்கு ஏற்றப்பட்டது என்பதே பொருத்தமாக இருக்கும்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை