மேலும் செய்திகள்
இன்று இனிதாக (13.12.2024) திருவள்ளூர்
13-Dec-2024
காடாக இருந்த மல்லேஸ்வரம் பகுதியில், 80 ஆண்டுகளுக்கு முன் ஒரு அரசமரத்தின் அடியில் சுயம்பு வடிவமாக எழுந்தவளே மாரம்மா தேவி.வணிகரான எஜமான் நரசய்யா என்பவர், அம்மனை சிறு குடிலில் வைத்து வழிபடலானார். நாளாக நாளாக கூட்டம் கூட்டமாக பக்தர்கள் வந்தனர்; அன்னையை பணிந்தனர். அந்த நாளின் மைசூரு மன்னர் ஸ்ரீ கிருஷ்ணராஜ உடையார் பொருள் உதவி செய்ய சிறு கோவிலாக மாறியது. இன்று ஐந்து நிலை ராஜ கோபுரமாக நிமிர்ந்து காட்சி தருகிறது.கடைசியாக, 1992ல் மாரம்மா தேவி கோவிலுக்கு குடமுழுக்கு நடந்தது. கோபுரத்தில் அழகிய சுதை வேலைப்பாடுகளில் சரஸ்வதி, துர்க்கை, கருமாரி, காமாட்சி, சாமுண்டிதேவியின் சிற்பங்கள் அருளாசி வழங்குகின்றன. தனித்தனி சன்னிதி
கொடிமரம், பலிபீடம் தரிசனத்துக்கு பின், ஆனந்த கணபதி, துர்க்கை அம்மன், நவக்கிரகங்கள், நாகவடிவில் ராகு-கேது என தனித்தனி சன்னிதிகள் உள்ளன. ஐந்து தலை நாகம் குடை பிடிக்க... ரோஜா, முல்லை, மல்லிகை மாலைசூடி, கையில் திரிசூலம் ஏந்தி அமர்ந்த கோலத்தில் ஸ்ரீமாரம்மா காட்சி தருகிறார். சமயபுரத்தின் மாரியம்மா, கர்நாடகாவில் மாரம்மாவாக காட்சி தருகிறார். அன்னை ஒருவளே!கருவறையில் ஒரு தனியறையில் அன்னையின் சிரசு மட்டும் வைத்து வழிபடுகின்றனர். அதனை அடுத்தே ஸ்ரீ மாரம்மாவின் சன்னிதி அமைந்துள்ளது. அலங்கார மண்டபத்தில் கணபதி, துர்க்கை, ஸ்ரீ மாரம்மாவின் உற்சவமூர்த்தி சிலைகளை தரிசிக்கலாம்.ஒவ்வொரு அமாவாசை, பவுர்ணமியன்றும் அதிகாலையில் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. ஆடி மாதம் முழுதுமே அம்மனின் மாதமாகவே கொண்டாடப்படுகிறது.செவ்வாய், வெள்ளி ஞாயிறுகளில் பெண்களின் கூட்டம் அலைமோதுகிறது. கேட்டதை கேட்டோருக்கு வழங்கும் ஸ்ரீ மாரம்மாவின் அருள்கரங்கள் பக்தர்களை வாழ்த்தி ஆசிர்வதிக்கின்றன.இக்கோவில் காலை 6:30 முதல் மதியம் 12:00 மணி வரையிலும்; மாலை 4:00 மணி முதல் இரவு 8:00 மணி வரையிலும் திறந்திருக்கும்.குறிப்பாக, பக்தர்களுக்கு நாள்தோறும் காலை 11:30 மணி முதல் 2:30 மணி வரை அன்னதானம் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பொதுமக்களின் வசதிக்காக மாலை 4:00 மணி முதல் 6:00 மணி வரை இலவச மருத்துவ முகாம் கோவில் வளாகத்தில் நடக்கிறது. எப்படி செல்வது?
மெஜஸ்டிக், கே.ஆர்.மார்க்கெட், சிவாஜிநகர் உட்பட நகரின் பல பகுதிகளிலிருந்து இந்த கோவில் வழியாக பல பஸ்கள் இயக்கப்படுகின்றன. 9.12.2024/ கல்யாண் குமார்10_Article_0001, 10_Article_0002சர்க்கிள் மாரம்மா கோவில். (அடுத்த படம்) அசுரனை வதம் செய்த மாரம்மா - நமது நிருபர் -.
13-Dec-2024