மல்லிகார்ஜூன கார்கேவுக்கு திடீர் உடல்நல கோளாறு; மருத்துவமனையில் அனுமதி
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
பெங்களூரு; காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.காங்கிரஸ் மூத்த தலைவரான மல்லிகார்ஜூன கார்கேவுக்கு நேற்று நள்ளிரவு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர் பெங்களூருவில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.அங்கு அவரை மருத்துவர்கள் பரிசோதித்த போது காய்ச்சலுடன், மூச்சுத்திணறலும் இருந்துள்ளது. இதையடுத்து, உடனடியாக மல்லிகார்ஜூன கார்கேவை மருத்துவர்கள் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தி உள்ளனர்.பல்வேறு கட்ட மருத்துவ பரிசோதனைகளையும் மேற்கொண்டு உள்ளனர். அவரை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். நிலைமை சீராகும் வரை மருத்துவ கண்காணிப்பிலே தொடர்ந்து வைக்கப்படுவார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.மல்லிகார்ஜூன கார்கே மருத்துவமனையில் இருக்கும் விவரத்தை அறிந்த அக்கட்சியின் மூத்த தலைவர்கள் விரைவில் அவர் குணம் அடைய வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.