உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சட்டத்திற்கு உட்பட்டு கவர்னருக்கு எதிராக கருத்து கூறலாம்: மம்தாவுக்கு ஐகோர்ட் அனுமதி

சட்டத்திற்கு உட்பட்டு கவர்னருக்கு எதிராக கருத்து கூறலாம்: மம்தாவுக்கு ஐகோர்ட் அனுமதி

கோல்கட்டா: மேற்கு வங்க கவர்னர் ஆனந்த போஸ் குறித்து ஆதாரமற்ற மற்றும் அவதூறு கருத்துகளை தெரிவிக்கக் கூடாது என தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்த கோல்கட்டா உயர்நீதிமன்ற அமர்வு பேச்சு சுதந்திரத்திற்கு உட்பட்டு கருத்துக் கூறலாம் என உத்தரவிட்டு உள்ளது.மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, திரிணமுல் காங்.,எம்.எல்.ஏ.,க்கள் சயந்திகா பானர்ஜி, ராயத் ஹூசைன் சர்கார் மற்றும் அக்கட்சி நிர்வாகி குணால் கோஷ் ஆகியோர், தன் மீது அவதூறு பரப்புவதாக அம்மாநில கவர்னர் ஆனந்த போஸ் கோல்கட்டா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.இம்மனுவை, கடந்த 16ம் தேதி விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ண ராவ், ‛‛ ஆக.,14 வரை கவர்னர் ஆனந்தபோஸ் குறித்து அவதூறான மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தெரிவிக்க மம்தா உள்ளிட்ட 4 பேருக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது'' என உத்தரவிட்டார். இந்த உத்தரவிற்கு தடை விதிக்கக் கோரி மம்தா பானர்ஜி மற்றும் குணாஷ் கோஷ் ஆகியோர் கோல்கட்டா உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்சில் மேல்முறையீடு செய்தனர்.இதனை விசாரித்த நீதிபதிகள் பிஸ்வரூப் சவுத்ரி மற்றும் ஐபி முகர்ஜி ஆகியோர் கொண்ட அமர்வு பிறப்பித்த உத்தரவு: பொது வாழ்க்கைக்கான கடமை மற்றும் பேச்சு சுதந்திரம் ஆகியவற்றை மீறாமல் கவர்னர் ஆனந்த போஸ் குறித்து கருத்து தெரிவிக்கலாம். இல்லையென்றால், மேல்முறையீடு செய்தவர்கள் பாதிப்பு மற்றும் பழிவாங்கல் நடவடிக்கைக்கு உள்ளாக நேரிடும். இவ்வாறு அந்த உத்தரவில் நீதிபதிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

p.s.mahadevan
ஜூலை 28, 2024 11:42

பேச்சு சுதந்திரம் என்ற பெயரில் நீதிபதிகளையும் விமரிசித்தல் நீதி தேவதை ஒத்துக்க்கொள்வாளா? பேச்சு மற்றும் எழுத்து சுதந்திரத்துக்கு எல்லை எது? யார் முடிவு செய்வது.? ஒரு கட்சியை சேர்ந்த மக்கள் பிரதிநிதியை அனைத்து மக்களும் ஒரு மனதாக தேர்ந்து எடுப்ப தில்லையே.


K.n. Dhasarathan
ஜூலை 27, 2024 21:13

நீதிபதிகள் வேறு வேறான கருத்துக்கள் கூறலாம், ஆனால் ஒரு கவர்னர் இந்த மாதிரி பேச்சுக்கள் வரும்வகையில் நடந்து கொள்வது சரியா ? கேவலம் தானே இவர் ஏப்படி கவர்னர் ஆனார் ? இன்னும் சில கவர்னர்கள் பட்டத்து ராஜா மாதிரி நினைத்துக்கொண்டு, மக்கள் பிரதிநிதிகளை அலட்சியப்படுத்துகிறார்கள், மக்கள் போராட ஆரம்பித்தாள் இவர்கள் இருக்கும் இடம் தெரியாமல் காணாமல் போயிடுவார்.


Vijayakumar Srinivasan
ஜூலை 28, 2024 23:55

உண்மை தான் சார்.ஆனால்.ஆள்கின்றகட்சிகளால்நியமனம்.ஆகவே.ஏதும்சொல்ல.இயலாது.கட்சிகள்எல்லாம்ஒன்றுதான்.


Godyes
ஜூலை 27, 2024 20:53

இதை பயன்படுத்தி முதல்வர் கவர்னரை என்ன வேணுமானாலும் பேசலாமா


GMM
ஜூலை 27, 2024 19:24

தனி நீதிபதி ஆதாரமற்ற, அவதூறு கருத்து கூடாது என்கிறார். அமர்வு , பொது வாழ்க்கைக்கு தேவையான கடமை மற்றும் பேச்சு சுதந்திரம் மீறாமல் கவர்னர் பற்றி கருத்து தெரிவிக்கலாம் என்கிறது. கடமை, பேச்சு சுதந்திர அளவை நிர்ணயிக்க அதிகாரம் பெற்றவர் யார்? மீறினால் தண்டிக்க முடியுமா? அப்படி என்றால், நீதிபதி பற்றி கருத்து தெரிவிக்கலாம். கவர்னர், முக்கிய அரசு பதவிக்கு நல்லவர்கள் முன் வர மாட்டார்கள். நீதிமன்றத்தில் வழக்கு நிரம்பி வழியும். மத்திய அரசு ஒரு குழு அமைத்து நீதிமன்றம், நீதிபதியின் குளறுபடிக்கு முடிவு கட்ட வேண்டும். மக்களிடம் நீதிமன்றம் பற்றி வெறுப்பு, கோபம் அதிகரிக்கும். ஜனநாயக நாட்டிற்கு நல்லதல்ல. தீவிரவாதம் புகுந்துவிடும்.


Balu
ஜூலை 27, 2024 21:47

super


K.SANTHANAM
ஜூலை 27, 2024 17:38

ஒரே சட்டம்..ஆனால் நீதிபதிகள் பார்வை வேறு..இதை எப்படி ஏற்றுக்கொள்வது?


மேலும் செய்திகள்