உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சரத்பவார், உத்தவை சந்திக்கிறார் மம்தா

சரத்பவார், உத்தவை சந்திக்கிறார் மம்தா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: நாளை மும்பை வரும் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சரத்பவார், உத்தவ் தாக்கரே ஆகியோரை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி மகன் ஆனந்த- ராதிகாமெர்சண்ட் திருமணம் நாளை (ஜூலை12) மும்பையில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்குமாறு அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்களுக்கும் முகேஷ் அம்பானி அழைப்பிதழ் வழங்கியுள்ளார். இதையடுத்து மஹாராஷ்டிரா வரும் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, முகேஷ் அம்பானி இல்ல திருமணத்தில் பங்கேற்கிறார். அதன் பின், இண்டியா கூட்டணியில் உள்ள தேசியவாத காங்., சரத்சந்திரபவார் கட்சியின் சரத்பவார், உத்தவ் சிவசேனா கட்சியின் உத்தவ் தாக்கரே ஆகியோரை சந்திக்கிறார். லோக்சபா தேர்தலுக்கு பின்னர் இண்டியா கூட்டணி தலைவர்களை முதன்முறையாக மம்தா சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின் போது தற்போதைய அரசியல் சூழல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

subramanian
ஜூலை 12, 2024 12:00

இவர்கள் சந்திப்பு இவர்களுக்கெல்லாம் தீதாய் முடியும்.


Kasimani Baskaran
ஜூலை 12, 2024 05:39

இல்லாத இந்திக்கூட்டணியை உடைக்கப்போகிறாரா... ஒரு பக்கம் இந்தி எதிர்ப்பு செய்து கொண்டு இந்திக்கூட்டணியில் அங்கம் வகிக்கும் தீம்க்காவையும் சேர்த்துக்கொள்ளலாம்...


A. Muthu
ஜூலை 11, 2024 21:23

பேசட்டும்... பேசட்டும்.வெளி ஊருக்கு போனா பொழுது போக வேண்டாமா?


lalbahadur (69)
ஜூலை 11, 2024 20:53

இந்த நாட்டிற்கு என்னதான் ஆச்சு? கடந்த 50ஆண்டுகளில் தேசிய சிந்தனை உள்ள தலைவர்கள் உருவாகவில்லையே அதைத் தாண்டி ஓரிருவர் தென்பட்டாலும் அவர்களை எதிர்க்க எதிர்மறை சக்திகள் தான் அதிகமாக உள்ளன. விரக்தியே மிஞ்சிஉள்ளது.


M Ramachandran
ஜூலை 11, 2024 19:50

கடைசி காலத்தில் நிம்மதியாக இருக்க வேனுமானால் கையை சுத்தமாகவும் நாட்டிற்கு உண்மையாகவும் இருந்தால் யாருடைய தயவும் தேவை இல்லையே.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை