உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / போதை மாத்திரை பதுக்கி வைத்திருந்தவர் கைது

போதை மாத்திரை பதுக்கி வைத்திருந்தவர் கைது

பாலக்காடு; பாலக்காடு அருகே, போதை மாத்திரையுடன் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.கேரள மாநிலம், பாலக்காடு மாவட்ட எஸ்.பி., அஜித்குமாரின் அறிவுரையின்படி, மண்ணார்க்காடு டி.எஸ்.பி., சுந்தரன் மேற்பார்வையில், செர்ப்புளச்சேரி எஸ்.ஐ., விவேக் தலைமையிலான போலீசார், நெல்லாய பகுதியை சேர்ந்த பசலு, 40, என்பவரின் வீட்டை சோதனையிட்டனர். அப்போது, 76.83 கிராம் எம்.டி.எம்.ஏ., போதை மாத்திரையை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, பசலுவை போலீசார் கைது செய்தனர். நீதிமன்றத்தில் அஜர்படுத்தி அவரை சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை