மனைவியுடன் கள்ளத்தொடர்பு சந்தேகத்தில் வாலிபரை கொன்று ஆற்றில் வீசியவர் கைது
திருவனந்தபுரம்:கேரள மாநிலம் வயநாட்டில் மனைவியுடன் கள்ளத் தொடர்பு இருப்பதாக சந்தேகத்தில் வாலிபரை கொலை செய்து ஆற்றில் வீசியவரை போலீசார் கைது செய்தனர்.உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் முகமது ஆரிப் 38. இவர் மனைவியுடன் கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் கல்பெட்டா அருகே உள்ள வெள்ளமுண்டா பகுதியில் கூலித்தொழில் செய்து வருகிறார். இவரது வீட்டின் அருகில் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த முஜீப் 25, என்பவர் வசித்து கூலி வேலை செய்தார். இருவரும் நட்பு ரீதியாக பழகி வந்தனர். அடிக்கடி முஜீப், ஆரீப் வீட்டுக்கு சென்று வந்துள்ளார்.இதனால் தனது மனைவியுடன் கள்ள தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகம் ஆரிபுக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக அடிக்கடி கணவன் ,மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் மாலை ஒரு ஆட்டோவை வாடகைக்கு அமர்த்தி இரண்டு பைகளுடன் ஏறினார். வழியில் மூளித்தோடு ஆற்றின் அருகே வந்தபோது ஆட்டோவை நிறுத்தும்படி கூறிய ஆரிப் இரண்டு பைகளையும் துாக்கி ஆற்றை நோக்கி நடந்தார். பின்னர் பைகளை ஆற்றுக்குள் வீசினார். வெட்டிக்கொலை
இதுகுறித்து ஆட்டோ டிரைவர் வெள்ளமுண்டா போலீசுக்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து போலீசார் ஆரிப்பை பிடித்து விசாரித்தனர். பின்னர் வீசிய பைகள் உடனடியாக மீட்கப்பட்டு திறந்து பார்த்தபோது அதில் மனிதனுடைய உடல் வெட்டி வைக்கப்பட்டிருந்தது. ஆரிப்பிடம் மேல்விசாரணையில் மனைவியுடன் கள்ளத்தொடர்பு இருப்பதாக ஏற்பட்ட சந்தேகத்தில் முஜிப்பை அரிவாளால் வெட்டிக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.இதை இவர் தனியாக கொலை செய்தாரா. அல்லது வேறு யாராவது உதவினார்களா என விசாரணை நடக்கிறது. இதனிடையே வீட்டில் சண்டை வரும்போதெல்லாம் முஜிப்பை வைத்து தன்னை திட்டியதாக மனைவி போலீசில் தெரிவித்துள்ளார்.