உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வக்கீலை கத்தியால் குத்தியவர் கைது

வக்கீலை கத்தியால் குத்தியவர் கைது

அன்னபூர்னேஸ்வரி நகர்; 'பார்க்கிங்' விஷயமாக ஏற்பட்ட தகராறில், முதியவரை கத்தியால் குத்தியவர் கைது செய்யப்பட்டார்.பெங்களூரு, நாகரபாவியின் விநாயகா நகரில் தன் குடும்பத்துடன் வசிப்பவர் தளபதி, 70. வக்கீலான இவர், நேற்று முன்தினம் காலையில், பணி நிமித்தமாக வெளியே சென்றிருந்தார். மதியம் வீடு திரும்பினார்.அப்போது கார் பார்க்கிங் தொடர்பாக, இவரது மருமகளுக்கும், அதே பகுதியில் வசிக்கும் ராகவேந்திரா, 39, என்பவருக்கும் வாக்குவாதம் நடந்து கொண்டிருந்தது. இதை பார்த்த தளபதி, ராகவேந்திராவிடம் தட்டி கேட்டார். கோபமடைந்த அவர், கத்தியால் தளபதியின் முதுகில் குத்திவிட்டு தப்பியோடினார்.காயமடைந்த அவர், மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். அன்னபூர்னேஸ்வரி நகர் போலீசார், ராகவேந்திராவை நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி