உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பார்லிமென்டிற்குள் அத்துமீறி நுழைந்த நபர் கைது

பார்லிமென்டிற்குள் அத்துமீறி நுழைந்த நபர் கைது

புதுடில்லி: டில்லியில் பார்லிமென்டிற்குள் சுவர் ஏறிக்குதித்து அத்துமீறி நுழைந்த நபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பார்லிமென்ட் மழைக் கால கூட்டத் தொடர் கடந்த ஜூலை 21ம் தேதி தொடங்கி, நேற்று வரை நடைபெற்றது. இந்த நிலையில், பார்லிமென்டிற்குள் மர்ம நபர் ஒருவர் அத்துமீறி நுழைந்துள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=kac02nlv&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இன்று காலை 6.30 மணியளவில் ரயில் பவன் அருகே உள்ள சுற்றுச்சுவரை ஏறிக்குதித்து, கருடா நுழைவு வாயில் அருகே சென்றுள்ளார். இதனைக் கண்ட பாதுகாப்பு அதிகாரிகள், அந்த நபரை மடக்கிப் பிடித்து விசாரித்து வருகின்றனர். இதே போன்று கடந்த ஆண்டு பார்லிமென்ட் வளாகத்திற்குள் அத்துமீறி ஒரு நபர் நுழைந்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Pats, Kongunadu, Bharat, Hindustan
ஆக 22, 2025 12:43

அது எப்படிங்க? பாராளுமன்ற சுற்றுச்சுவரை ஒருவன் ஏறி உள்ளே குதித்து நடமாடும் அளவுக்கா அந்த சுவர் எளிதாக, பாதுகாப்பற்றதாக உள்ளது? ஏ.ஐ. மூலம் தானாக அசைவுகளை கண்டுபிடித்து எச்சரிக்கை செய்யும் கேமிராக்கள் தெருவுக்கு தெரு கிடைக்கிறதே இது துளியும் நம்பும்படி இல்லை. படிக்கவே அவமானமாக இருக்கிறது.


Puratchi Veeran
ஆக 22, 2025 16:04

இப்ப்படி நடக்கும்போதுதான் திரும்ப திரும்ப நம்பிக்கை வரமாட்டேங்குது


bogu
ஆக 22, 2025 12:27

சரியாக பாருங்க உலக்கை யாக இருக்கப் போகிறார் எதையும் வித்தியாசமாக செய்யப்போயி.......


rajinidasan
ஆக 22, 2025 13:39

ஹா ஹா ஹா... super


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை