உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மகள், மாமியார், மைத்துனியை சுட்டு கொன்றவர் தற்கொலை

மகள், மாமியார், மைத்துனியை சுட்டு கொன்றவர் தற்கொலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சிக்கமகளூரு: மனைவி பிரிந்து சென்றதால் வெறுப்படைந்த கணவர், தன் மகள், மாமியார், மைத்துனியை சுட்டு கொன்று விட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டார்.கர்நாடக மாநிலம், சிக்கமகளூரு மாவட்டம், கொப்பாவைச் சேர்ந்தவர் ரத்னாகர், 37; தனியார் பள்ளி வேன் ஓட்டுநர். இவருக்கு திருமணமாகி சுவாதி என்ற மனைவியும், மவுல்யா, 7, என்ற மகளும் இருந்தனர்.குடும்ப பிரச்னை காரணமாக, தம்பதிக்குள் அடிக்கடி சண்டை நடந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன், கணவர், மகளை விட்டு பிரிந்த சுவாதி, பெங்களூரில் தனியாக வசித்து வருகிறார். மகளை வளர்க்கும் பொறுப்பு, ரத்னாகரிடம் வந்தது. தான் பணியாற்றும் பள்ளியிலேயே, மகளை சேர்த்திருந்தார். மகள், தினமும் தன் தாயை கேட்டு அடம் பிடித்தார்.பள்ளியிலும் சக மாணவியர், மவுல்யாவிடம், 'உன் தாய் எங்கே' என கேட்டுள்ளனர். இதை அவர் தந்தையிடம் கூறி வருந்தினார். இதனால், ரத்னாகர் கடும் மன உளைச்சலில் இருந்தார்.இதற்கிடையே யுகாதி பண்டிகைக்காக, ரத்னாகரின் மாமியார் வீட்டினர், பேத்தி மவுல்யாவை தாங்கள் வசிக்கும் மாகலு கிராமத்துக்கு அழைத்து சென்றிருந்தனர்.பண்டிகை கொண்டாட, அங்கு தன் மனைவியும் வந்திருக்கலாம் என நினைத்து ரத்னாகர், நேற்று முன்தினம் இரவு 10:00 மணியளவில், நாட்டு துப்பாக்கியுடன் மாமியார் வீட்டுக்கு சென்றார்.அங்கு மனைவி வரவில்லை. கோபமடைந்த ரத்னாகர், துப்பாக்கியால் மகள் மவுல்யா, 7, மாமியார் ஜோதி, 50, மைத்துனி சிந்து, 24, ஆகிய மூவரையும் சுட்டு கொன்றார். துப்பாக்கி சூட்டில் சிந்துவின் கணவர் அவினாஷின் காலில் குண்டு பாய்ந்தது.அதன்பின் ரத்னாகர், தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன், அவர் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதில், 'என் மனைவி எனக்கு துரோகம் செய்து, இரண்டு ஆண்டுகளாகிறது. மகள் தினமும் தாயை கேட்கிறாள். பள்ளியிலும் உன் தாய் எங்கே என, அவளிடம் கேட்கின்றனர். என் மகளின் அன்பை விட, எனக்கு வேறு எதுவும் பெரிது இல்லை' என கூறியுள்ளார்.தகவலறிந்து வந்த போலீசார், காயமடைந்த அவினாஷை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். உடல்களை மீட்டு, சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

aaruthirumalai
ஏப் 03, 2025 10:38

தவறாக நினைக்க வேண்டாம் பணத்தின் மேல் உள்ள குறியால் பெண்கள் ஒழுக்கமான நிலையில் இருந்து தவறி விடுகிறார்கள். அவர்களின் இந்த நிலைக்கு ஆண்களும் ஒரு வகையில் காரணமாக இருக்கிறார்கள். இதற்கு மூல காரணத்தை தேடினால் குடும்ப தொலைக்காட்சிகளும் ஒரு காரணமாக இருக்கலாம்.


N Annamalai
ஏப் 03, 2025 07:12

மகளை படிக்க வைத்து பெரிய ஆள் ஆகி இருக்கலாம். கோழைத்தனமான முடிவு .எல்லா குடும்பங்களும் சின்னாபின்னம் ஆகி விட்டது. ஒரு தவறான முடிவு மனநலம் அவசியம். உண்மையாகவே கடன் தொல்லை அதிகம் ஆகி விட்டது. நடுத்தர மக்கள் என்ன செய்வார்கள்? எங்கு போவார்கள்? பணக்காரர்கள் மேலும் பணம் சேர்த்துக்கொண்டே போகிறார்கள். ஏழை ஏழை ஆகிக்கொண்டே போகிறான். இதன் ஆரம்பம் பணத்தில் தான் இருக்கும் .


Padmasridharan
ஏப் 03, 2025 06:52

இந்திய பொருளாதாரத்தை, TAXவரிகள் மூலம் வளர்த்ந்த பெண்களின் குடும்பங்களின் ஒவ்வொரு வீட்டின் வருந்தத்தக்க உண்மைச்சம்பவத்திற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. பெண் சுதந்திரம் என்பதை தவறாக புரிந்துக்கொண்டு வேலை செய்தால் மற்றவர்களை பற்றி நினைக்காமல் பணத்திற்காகவும், காமத்திற்காகவும் தன் நலமாக எந்த முடிவும் எடுக்கலாம் என்ற எண்ணங்களை வளர்த்துவிட்டிருக்கிறது. என் இஷ்டத்திற்கு வருவேன், போவேன், என்ன வேண்டுமானாலும் செய்வேன் என்று பெற்றவர்களையும், குழந்தைகளையும் நினைக்காமல் சுயநலமிக்க பொருளாதாரத்தை வளர்த்த சுதந்திர நாடாக மாறிக்கொண்டிருக்கிற காட்சிகள்தான் இது. Grown up economy has increased "Pieceful Families" Not peace within family


Swaminathan
ஏப் 03, 2025 07:25

உங்களது சொற்கள் ஒவ்வொன்றும் பொன்னால் பொறிக்கப்பட வேண்டியவை. எனது மனதில் இருந்தவற்றை மிகவும் தெளிவாக எடுத்து சொல்லி இருக்கிறீர்கள். கொள்கை அளவில் பல நல்ல மாற்றங்களை உடனடியாக செய்ய வில்லை என்றால் இத்தகைய சம்பவங்களுக்கு நாம் முற்றுப்புள்ளி வைக்கவே முடியாது. பொருளாதார சீர்திருத்தங்களைச் செய்வதற்கு முன்பு ஒவ்வொருவரது நடத்தையிலும் எவ்வித மாற்றங்கள் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்திருக்க வேண்டும். அவற்றைச் செய்யாமல் போனது இப்போது சீர்கேடுகள் பலவிதத்தில் எதிர்கொள்ளவேண்டியதாகி உள்ளன.


Svs Yaadum oore
ஏப் 03, 2025 06:33

பண்டிகை கொண்டாட, மகளை பார்க்க கூட மனைவி வரவில்லை ..... மகள் தினமும் தாயை கேட்கிறாள். பள்ளியிலும் உன் தாய் எங்கே என, அவளிடம் கேட்கின்றனர். என் மகளின் அன்பை விட, எனக்கு வேறு எதுவும் பெரிது இல்லை என கூறியுள்ளாராம் ......ஆனால் பெற்ற தாய்க்கு மகள் எப்படி போனாலும் அதை பற்றி கவலை இல்லை ... எல்லாம் காலத்தின் கோலம் .....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை