உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பெண்ணுக்கு மெசேஜ் அனுப்பி தொல்லை; போலீஸ் ஏட்டு சஸ்பெண்ட்

பெண்ணுக்கு மெசேஜ் அனுப்பி தொல்லை; போலீஸ் ஏட்டு சஸ்பெண்ட்

திருவனந்தபுரம்: விபத்து தொடர்பாக புகார் கொடுக்க வந்த இளம் பெண்ணின் அலைபேசி எண்ணை வாங்கி மெசேஜ் அனுப்பி தொல்லை கொடுத்த போலீஸ் ஏட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டார். கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் அடூர் போலீஸ் ஸ்டேஷன் ஏட்டு சுனில் நாராயணன். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் திருவல்லா போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரிந்த போது வாகன விபத்து தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த பெண் புகார் கொடுக்க வந்தார். அவரிடம் விசாரணைக்கு தேவைப்படும் என்று கூறி ஏட்டு சுனில் நாராயணன் அலைபேசி எண்ணை வாங்கி வைத்திருந்தார். சில நாட்கள் கழித்து வாட்ஸ் ஆப்பில் அடிக்கடி மெசேஜ் அனுப்பினார். தனக்கு மெசேஜ் அனுப்ப கூடாது என்று அந்த பெண் பலமுறை எச்சரித்தும் தொடர்ந்து அனுப்பினார். அடூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த பின்னரும் இதையே தொடர்ந்தார். இது பற்றி அப்பெண் பத்தனம்திட்டா எஸ்.பி., யிடம் புகார் கொடுத்தார் விசாரணை நடத்திய எஸ்.பி., ஆனந்த், ஏட்டு சுனில் நாராயணனை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

shyamnats
செப் 09, 2025 10:57

வேலியே பயிரை மேயும் போது, தற்காலிக பனி நீக்கம் பத்தாது, நிரந்தரமாக பணியிலிருந்து நீக்க வேண்டும்.


சமீபத்திய செய்தி