உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பஞ்சாப் அமிர்தசரசில் குண்டுவெடிப்பு; காலிஸ்தான் பயங்கரவாதி உயிரிழப்பு

பஞ்சாப் அமிர்தசரசில் குண்டுவெடிப்பு; காலிஸ்தான் பயங்கரவாதி உயிரிழப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரசில் நடந்த குண்டு வெடிப்பில் காலிஸ்தான் பயங்கரவாதி ஒருவன் உயிரிழந்தான்.பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் உள்ள மஜிதா சாலை பைபாஸில் பல சத்தத்துடன் வெடிகுண்டு ஒன்று வெடித்தது. இதில் ஒரு நபர் பலத்த காயம் அடைந்தார். அப்பகுதி மக்கள் பதற்றம் அடைந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் காயம் அடைந்தவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அந்த நபர் உயிரிழந்தார். போலீசார் நடத்திய விசாரணையில் காலிஸ்தான் பயங்கரவாதி என்பது தெரியவந்துள்ளது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு பின்னணியில் சதி ஏதும் உள்ளதா? என்பது குறித்து போலீசார் பல்வேறு கோணத்தில் விசாரிக்கின்றனர்.இது குறித்து டி.ஐ.ஜி சதீந்தர் சிங் கூறியதாவது: குண்டுவெடிப்பு நடந்தபோது வெடிபொருள் அவரது கைகளில் இருந்தது. அவரது அடையாளம் மற்றும் அவர் எந்த பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர் என்பது குறித்து நாங்கள் விசாரித்து வருகிறோம்.குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு உள்ள பின்னணி குறித்து விசாரணை நடந்து வருகிறது. விரைவில் உண்மைகள் கண்டுபிடிக்கப்படும். மக்கள் பீதி அடைய வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

சிந்தனை
மே 27, 2025 16:14

காவல்துறை அலுவலகத்தில் குண்டு வெடித்து இருந்தால் மக்கள் பீதி அடைய மாட்டார்கள் காவல் துறையினரும் பீதி அடைய மாட்டார்கள் ஆனால் மாற்றி நடக்கிறது என்ன செய்வது என்றே தெரியவில்லை


என்றும் இந்தியன்
மே 27, 2025 16:11

இந்த குண்டை கொண்டு போய் நீயே வெடிக்கவைத்து இறந்து போ உன் வீட்டிற்கு பணம் வரும் என்று சொல்லி அனுப்பியுள்ளார்கள். இது ஒரு பிரைமரி வெடிகுண்டு டெஸ்ட். இதன் பூர்விகம் வரை போலீஸ் போனால் உடனே அடங்கிவிடும் இல்லையென்றால் இந்த இடத்தில் அந்த இடத்தில் என்று இது தொடரும்


deva
மே 27, 2025 14:02

கண்டிப்பாக இதுக்கு பின்னாடி என்னமோ இருக்கு பாஸ் அந்த குண்டு அவங்க தெரியாம எல்லாம் வெடிகளை...


சமீபத்திய செய்தி