உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பெண்குரலில் போன் ஆப்பில் மோசடி: கற்பை இழந்த மாணவிகளின் பரிதாபம்

பெண்குரலில் போன் ஆப்பில் மோசடி: கற்பை இழந்த மாணவிகளின் பரிதாபம்

போபால்; ஸ்காலர்ஷிப் வாங்கி தருவதாக பெண்குரலில் மொபைல் போன் ஆப்பில் பேசி மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்த நபரை போலீசார் கைது செய்தனர். போபால் அருகே சித்தி மாவட்டத்தை சேர்ந்தவர் மில் தொழிலாளி பிராஜேஷ் குஷ்வாகா. இவர் கல்லூரி பேராசிரியராக சில கல்லூரி மாணவிகளிடம் பெண் குரலில் பேசுவார். ஸ்காலர்ஷிப் வாங்கி தருவதாக சொல்வார். இதனை கேட்டு ஒரு இடத்திற்கு வரசொல்வார். வரும் பெண்களை ஒரு நபர் வந்து பைக்கில் அழைத்து சென்று அவரது வீட்டில் விடுவார் அவர் பலாத்காரம் செய்துள்ளார். இதில் தப்பிய மாணவிகள் சிலர் அளித்த புகாரின் பேரில் பிராஜேஷ் குஷ்வாகா மற்றும் அவனது கூட்டாளியை போலீசார் கைது செய்துள்ளனர். குற்றவாளிகளிடம் தொடர்ந்து விசாரித்து வருவதாகவும், இவரது வீட்டை இடிக்க உத்தரவிட்டுள்ளதாகவும், அம்மாநில இன்ஸ்பெக்டர் ஜெனரல் மகேந்திரஷிகார்வார் கூறினார். மேலும் இது போன்ற குரல் மாற்றும் ஆப் கள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டு கொண்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

ram
மே 28, 2024 14:11

அப்ப கோவை குண்டு வைத்தவனை தூக்கில் போட்டு விடலாம், நீங்கள் சொல்லுவதை போல் இருந்தால்.


Bahurudeen Ali Ahamed
மே 26, 2024 16:16

ஒருவன் செய்த குற்றத்திற்கு, அவனுடைய மனைவி குழந்தைகள் பாதிக்கப்படுவது எந்தவிதத்தில் நியாயம். குற்றவாளிக்கு கடுமையான தண்டனை கொடுப்பதுதான் சரியாக இருக்கும், அது தூக்குத்தண்டனையாக இருந்தாலும் சரி.


வாய்மையே வெல்லும்
மே 26, 2024 16:31

இன்னொருவருக்கு போதனை அதுவும் இலவசமாக தருவது ரொம்ப சுலபம். வலி மற்றும் வேதனை அவரவருக்கு வந்தால் தான் அதன் சீற்றம் புரியும். அப்போது பேசுவது வேலைக்கே ஆகாது .


subramanian
மே 26, 2024 14:58

பெண்கள் சரியான முறையில் பரிசீலனை செய்து தகவல்கள் சரிபார்த்து, குடும்பம்/ நண்பர்கள் கலந்து ஆலோசனை செய்து எந்த வேலையையும் செய்ய வேண்டும்.


RAJ
மே 26, 2024 10:43

இவனை தூக்கி சிங்கம் புலி உள்ள கூண்டில் போடவும்.


தத்வமசி
மே 26, 2024 10:13

வீட்டை இடிக்காமல் முக்கியமானதை கட் பண்ணிடலாமா ? இதுக்குன்னே ஒரு கூட்டம் அலையுது அதற்கு ஒத்து ஊதரவங்களையும் தண்டிக்க வேண்டும்.


Palanisamy Sekar
மே 26, 2024 10:12

நீதிமன்ற நடவடிக்கை காலதாமதமாகலாம்..ஆனால் அரசு உடனே செய்திடும் இடிப்பு வேலையை கனகச்சிதமாக செய்துவிடும் . அந்த தண்டனையே குற்றவாளியை நோகடித்துவிடும். வடஇந்தியாவில் செய்வதை தென்னிந்தியாவில் அதுபோல செய்வதில்லை என்று தெரியவில்லை. பாலியல் குற்றங்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே செல்கின்றதே தவிர குற்றவாளிகள் இங்கே சுலபமாக தப்பித்துவிடுகின்றார்கள். தண்டனை என்பது இருப்பது ஆண்டுகள் பிறகுதான் வழங்கப்படும். இந்த நூதன தண்டனையை அமல்படுத்தியவர் யோகி ஆதித்யநாத் என்பதில் பெருமைதான்.


N Sasikumar Yadhav
மே 26, 2024 09:50

அடுத்த புல்டோசர் பாபா வாழ்க வாழ்க


lana
மே 26, 2024 09:30

நல்ல காவல்துறை. தப்பு செஞ்சா வீட்டை இடிப்பது. அப்போது தான் வீட்டில் உள்ளவர்கள் பயப்படுவது. இங்கு ஒரு காவல்துறை இருக்கிறது ஆட்சியாளர்க்கு செம்பு தூக்குவது மட்டுமே வேலை. இப்படி வீடு இடிப்பு treatment நாலு இடத்தில் நடந்தால் குற்றம் குறையும்


vels
மே 26, 2024 10:23

இங்க வீட்டை இடித்தால் ஜனநாயகம் கெட்டு விட்டது என புலம்புவார்கள்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை