உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சிக்ஸர் அடித்தவர் பலி: உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் பரிதாபம்

சிக்ஸர் அடித்தவர் பலி: உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் பரிதாபம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பஞ்சாபில் நடந்த உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் சிக்ஸர் அடித்த வீரர், அடுத்த சில வினாடிகளில் மாரடைப்பால் இறந்தார். இந்த சோக சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.பஞ்சாபின் பிரோஸ்பூரில் டி.ஏ.வி பள்ளி மைதானத்தில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இந்த கிரிக்கெட் போட்டியை சிலர் வீடியோ எடுத்தனர்.அந்த வீடியோவில், பேட்டிங் செய்தவர், தான் எதிர்கொண்ட பந்தை சிக்ஸருக்கு அனுப்புகிறார். அதை தொடர்ந்து மைதானத்தின் நடுப்பகுதிக்கு நடந்து சென்றவர் அப்படியே சரிந்து கீழே விழுகிறார். உடனே அங்கிருந்த மற்ற வீரர்கள் அவருக்கு உதவ முன்வருகின்றனர். இருப்பினும் அவர் சுயநினைவு இல்லாமல் கிடந்தார். அதை தொடர்ந்து நெஞ்சுவலியால் உயிரிழந்தது தெரியவந்தது. உயிரிழந்தவர் ஹர்ஜீத் சிங் என்பது தெரியவருகிறது. இந்த வீடியோ காட்சி தான் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.இதே போல கடந்த 2014 ல் மும்பையில் ஒரு சம்பவம் நடந்தது.சமீப காலங்களில், 20 வயதுக்குட்பட்டவர்கள் கூட இதேபோன்ற நிலையை சந்தித்துள்ளனர். இந்த சம்பவம், அனைவரும் தங்கள் உடல்நலத்தை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று உணர்த்தும் வகையில் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

ஆரூர் ரங்
ஜூன் 30, 2025 11:23

பெரும்பாலான இக்கால இளைஞர்கள் அடிக்கடி பீட்ஸா பர்கர் பிரியாணி சாப்பிட்டு உடல்நலத்தை கவனித்துக் கொள்கிறார்கள்.


ஜெகதீசன்
ஜூன் 30, 2025 10:26

விளையாட்டு, திருமண விழா நடனமாடுதல் ஆகியவற்றில் கூட மாரடைப்பு ஏற்படுகிறது. நீர்சத்து குறைபாடு, போதிய பயிற்சி மற்றும் உடற்தகுதி இல்லாமல் திடீரென விளையாடுவதும் காரணம். 35 வயதிற்கு பின் ட்ரெட் மில் டெஸ்ட் மூலம் தான் எவ்வளவு நாடி துடிப்பு வரை போகலாம், எந்த அளவு உடல் இயக்கம் வரை தேவையான ஆக்ஸிஜன் இருதயம் செல்கிறது என்பதை அறிந்து கொள்ளனும்.


Ram
ஜூன் 30, 2025 09:44

முதலில் அனைவருக்கும் முதலுதவி பற்றி விழிப்புனர்வு தேவை.


நிக்கோல்தாம்சன்
ஜூன் 30, 2025 06:35

சிக்கன் அதிகம் உட்கொள்ளுபவர்கள் பலரும் இப்படி சாகின்றனரே


Ramesh Sargam
ஜூன் 29, 2025 22:31

இந்த காலத்தில் இளைஞர்கள் பலர் மாரடைப்பினால் உயிரிழப்பது மிகவும் வருந்தத்தக்க விஷயமாகும். மருத்துவர்கள் என்ன காரணம் சொல்லப்போகிறார்கள் இது போன்று இளைஞர்கள் மாரடைப்பில் இறப்பதற்கு? அதை தடுக்க என்ன வழி, அதையும் அவர்கள் கூறவேண்டும்.


முக்கிய வீடியோ