உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / போலீசாரை பார்த்து ஓடியவர் கிணற்றில் விழுந்தார்: 4 மணி நேரத்திற்கு பின் மீட்பு

போலீசாரை பார்த்து ஓடியவர் கிணற்றில் விழுந்தார்: 4 மணி நேரத்திற்கு பின் மீட்பு

மூணாறு : கேரள மாநிலம் நெடுங்கண்டத்தில் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசாரை பார்த்து ஓடிய போது கிணற்றில் விழுந்தவர், நான்கு மணி நேரத்திற்கு பின் மீட்கப்பட்டார்.இடுக்கி மாவட்டம் நெடுங்கண்டம் போலீசாருக்கு போதைப் பொருள் கடத்துவதாக நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது. அதனால் நகரில் கைலாசப்பாறை ரோட்டில் இரவு 8:00 மணிக்கு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ஸ்ரீகுட்டன், அஜ்மல் டூவீலரில் வந்தனர்.போலீசார் டூவீலரை தடுத்து நிறுத்திய போது பின்னால் அமர்ந்து இருந்த அஜ்மல் 23, இறங்கி அருகில் உள்ள விளை நிலத்தில் ஓடினார். போலீசார், பொது மக்கள் பின் தொடர்ந்த போதும் கண்டு பிடிக்க இயலவில்லை.இதனிடையே விளை நிலத்தில் ஓடிய அஜ்மல், அதனுள் உள்ள கிணற்றில் தவறி விழுந்தார். குழாயை பிடித்தவாறு வெகு நேரம் தண்ணீருக்குள் கிடந்தார். பின்னர் அச்சம் ஏற்பட்டதால் கூச்சலிட்டார். அதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. போலீசார், தீயணைப்பு துறையினர் அஜ்மலை 4 மணி நேரத்திற்கு பின் மீட்டு நெடுங்கண்டம் தாலுகா மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர் போலீசாரை பார்த்து ஓடியது குறித்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை