மேலும் செய்திகள்
ஜாமின் ரத்தான சூழலில் து.மு., உடன் வினய் ஆலோசனை
08-Jun-2025
புதுடில்லி:மின்சார ரிக் ஷா டிரைவரை துப்பாக்கியால் சுட்ட கார் உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.நந்த் நாக்ரியில், 23ம் தேதி அதிகாலை, மின்சார ரிக் ஷா டிரைவர் வினய்,30, அமித் விஹாரில் இருந்து சபோலியில் உள்ள வீட்டுக்குச் சென்றார். ககன் சினிமா அருகே திருப்பத்தில், கார் மீது ரிக் ஷா மோதியது.ஆத்திரம் அடைந்த கார் உரிமையாளர், வினயுடன் வாக்குவாதம் செய்தார். திடீரென துப்பாக்கியை எடுத்து வினய் மீது சுட்டு விட்டு தப்பிச் சென்றார். காயம் அடைந்த வினய், ஜி.டி.பி., மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்த போலீசார், கார் உரிமையாளர் சமீர் சர்மா,46, மற்றும் அவரது தோழி ஆகிய இருவரும் நேற்று கைது செய்யப்பட்டனர். அவரிடம் இருந்து துப்பாக்கி மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணை நடக்கிறது.
08-Jun-2025