உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / லஞ்ச வழக்கில் பிறழ்சாட்சி கூறியவருக்கு 3 ஆண்டு சிறை

லஞ்ச வழக்கில் பிறழ்சாட்சி கூறியவருக்கு 3 ஆண்டு சிறை

கொப்பால்: நீதிமன்றத்தில் பிறழ்சாட்சி அளித்தவருக்கு, மூன்று ஆண்டு சிறை தண்டனை விதித்து, கொப்பால் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.கொப்பாலின் பீசள்ளி கிராமத்தில் வசிக்கும் ஒருவர், தன் நிலத்தின் சர்வே எண்ணை மாற்றி, பத்திரம் தயாரித்துத் தரும்படி, கிராம பஞ்சாயத்தில் கோரிக்கை விடுத்தார். இவரிடம் கிராம கணக்கு அதிகாரி ரவி ஷெட்டி, இவரது உதவியாளர் மல்லய்யா லஞ்சம் பெற்று, பத்திரத்தை மாற்றிக் கொடுத்துள்ளனர்.கிராம கணக்கு அதிகாரி லஞ்சம் வாங்கியது குறித்து தெரிந்து கொண்ட சிதானந்தையா என்பவர், லோக் ஆயுக்தாவில் புகார் செய்தார். லோக் ஆயுக்தா போலீசார், கிராம கணக்கு அதிகாரி ரவி ஷெட்டி, அவரது உதவியாளர் மல்லையா மீது வழக்குப் பதிவு செய்தனர்.விசாரணையை முடித்து, கொப்பால் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின்போது, சிதானந்தையா பிறழ்சாட்சியம் அளித்தார். எனவே, ரவி ஷெட்டி, மல்லையா விடுதலை செய்யப்பட்டனர்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உயர் நீதிமன்ற தார்வாட் கிளையில், லோக் ஆயுக்தா போலீசார் மேல் முறையீடு செய்தனர். விசாரணை நடத்திய நீதிமன்றம், பிறழ்சாட்சி கூறிய சிதானந்தையாவிடம் மீண்டும் விசாரணை நடத்தி, அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி, கொப்பால் மாவட்ட நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது.இதன்படி நீதிமன்றம் சாட்சி, ஆதாரங்களை அலசி, ஆராய்ந்து சிதானந்தையா பிறழ்சாட்சி கூறியதை உறுதி செய்தது. அவருக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை, 10,000 ரூபாய் அபராதம் விதித்து, நேற்று தீர்ப்பளித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை