உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மீன் பிடிக்க சென்றவர் நீரில் மூழ்கி பலி

மீன் பிடிக்க சென்றவர் நீரில் மூழ்கி பலி

பாலக்காடு; ஓடையில் மீன்பிடிக்கச் சென்றவர், நீரில் மூழ்கி இறந்தார்.கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், தேங்குறுச்சி பகுதியை சேர்ந்தவர் ரமேஷ், 44. கோட்டயம் பகுதியில் உள்ள பேக்கரியில் வேலை பார்த்தார். இவரது மனைவி ரம்யா.இந்நிலையில், விடுமுறையை ஒட்டி வீட்டுக்கு வந்த ரமேஷ், நேற்று முன்தினம் காலை கன மழை பெய்த போது, ஓடையில் மீன் பிடிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது, ஓடையில் தவறி விழுந்து, நீரில் மூழ்கிய ரமேஷை, அப்பகுதி மக்கள் மீட்டு மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார். குழல்மன்னம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ