உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வன்முறைகளுக்காக பகிரங்க மன்னிப்பு கோரிய மணிப்பூர் முதல்வர்

வன்முறைகளுக்காக பகிரங்க மன்னிப்பு கோரிய மணிப்பூர் முதல்வர்

இம்பால்: மணிப்பூரில் மோதல்கள் காரணமாக ஏற்பட்ட வன்முறை சம்பவங்கள் மற்றும் தாக்குதல்களுக்கு, அம்மாநில முதல்வர் பைரேன் சிங் பொதுமக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார்.வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் முதல்வர் பைரேன் சிங் தலைமையில் பா.ஜ., ஆட்சி அமைந்துள்ளது. இங்கு, மெய்டி மற்றும் கூகி சமூகத்தினருக்கு இடையே கடந்தாண்டு ஏற்பட்ட மோதல், மிகப்பெரிய கலவரமாக மாறியது. தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன.இந்த கலவரத்தில் குழந்தைகள், பெண்கள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் பலியாகினர். நுாற்றுக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர். இந்நிலையில், இதுவரை நடந்த வன்முறை சம்பவங்களுக்கு மன்னிப்பு கோரியுள்ள முதல்வர் பைரேன் சிங், புத்தாண்டு மகிழ்ச்சிகர மாக இருக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். இம்பாலில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது: இந்த மொத்த ஆண்டும் மிக துரதிர்ஷ்டவசமாக அமைந்தது. கடந்த 2023 மே மாதம் முதல் தற்போது வரை நடந்த சம்பவங்களுக்கான மக்களிடம் மன்னிப்பு கோருகிறேன். இந்த வன்முறை சம்பவங்களால், பலர் தங்களது அன்புக்குரியவர்களை இழந்துள்ளனர். பலர் தங்கள் வீடுகளை தொலைத்துள்ளனர். இதற்காக மிகவும் வருந்துகிறேன்; மன்னிப்பு கோருகிறேன்.இருப்பினும், கடந்த நான்கு மாதங்களாக அமைதிக்கான சூழல் மேம்படுவதை பார்த்து நம்பிக்கை கொள்கிறேன். இந்த புதிய ஆண்டில் இயல்புநிலை திரும்புமென நம்பிக்கை உள்ளது. மாநிலத்தில் உள்ள அனைத்து சமூகங்களிடமும் நான் முறையிடுவது என்னவென்றால், என்ன நடந்ததோ, அது நடந்துவிட்டது. நீங்கள் பழைய தவறுகளை மறக்கவும், மன்னிக்கவும் வேண்டும். நாம் அமைதியான, வளமான மணிப்பூர் நோக்கிய புதிய வாழ்க்கையை துவங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

venugopal s
ஜன 01, 2025 17:16

அடடா,முதலை கண்ணீர் வடிக்கிறதே? தேர்தல் வருகிறதோ?


J.Isaac
ஜன 01, 2025 14:01

திட்டமிட்டு கலவரத்தை தூண்டிவிட்டு, கிட்டத்தட்ட 400 கிறிஸ்தவ ஆலயங்கள், ஆயிரக்கணக்கான மக்களின் வீடுகளை தீக்கிரையாக்கி வனவாசிகளாக்கிவிட்டு மன்னிப்பு கேட்க எப்படி மனம் வருகிறது.


Sampath Kumar
ஜன 01, 2025 10:13

உள்நாட்டினரை இருக்க விட்டால் தான் பிரச்னை தீரும் குறிப்பாக மலைவாழ் ஆதிவாசிகளை அப்புற படுத்தி கார்பொரேட் கொம்பனுகளுக்கு விற்க துடிக்கும் கேவலமான பிஜேபி அரசின் கொள்கையால் தான் இந்த பிரச்னை


ஆரூர் ரங்
ஜன 01, 2025 12:19

கலவரம் செய்யும் குக்கி எல்லாம் வந்தேறி. இன்னும் கூட மியான்மர் எல்லையை திறந்து வைக்க சண்டை இடுகிறார்கள். முக்கிய காரணம் அபின் வர்த்தகம். கோர்ட் தீர்ப்பால் உருவான பிரச்சனைக்காக முதல்வர் மன்னிப்பு கேட்டது தவறு. போதை வியாபாரிகளை அடித்து விரட்ட மியான்மர் எல்லையை முழுவதுமாக மூட வேண்டும். ஒரு அன்னிய மிஷனரியும் அங்கு செயல்பட விடக்கூடாது.


R.RAMACHANDRAN
ஜன 01, 2025 08:59

மத்தியில் மற்றும் மாநிலங்களில் ஆள்பவர்கள் அரசமைப்பின் படி ஆட்சி நடத்தாமல் வாக்கு வங்கி அடிப்படையில் ஆட்சி நடத்துவதால் வலிமை மிக்க சமுதாயம் எளிமையானவர்களை வாழவிடாமல் செய்கின்றது.


Kasimani Baskaran
ஜன 01, 2025 08:00

வெளிநாட்டினர்களை வெளியேற்றினால் பிரச்சினை எளிதில் தீர்ந்துவிடும்.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 01, 2025 07:00

அவரு மனுசன் ... சங்கடமான தருணங்களில் இருநூறு தொகுதிகளில் வெற்றி உறுதின்னு சொல்லாதவர் ....


கிஜன்
ஜன 01, 2025 04:35

சவுக்கடி ....மணிப்பூர் வரை எட்டியிருப்பதில் மகிழ்ச்சி .... ஆள்பவர்கள் அப்பாவி மக்களின் மீதான வன்முறைக்கு தார்மீக பொறுப்பேற்கவேண்டும் ... அது தான் நல்ல ஜனநாயகம் ...


கிஜன்
ஜன 01, 2025 04:35

சவுக்கடி ....மணிப்பூர் வரை எட்டியிருப்பதில் மகிழ்ச்சி .... ஆள்பவர்கள் அப்பாவி மக்களின் மீதான வன்முறைக்கு தார்மீக பொறுப்பேற்கவேண்டும் ... அது தான் நல்ல ஜனநாயகம் ...


N Sasikumar Yadhav
ஜன 01, 2025 09:45

ஆனால் திருட்டு திராவிட மாடல் வேங்கைவயல் கள்ளக்குறிச்சி அண்ணா பல்கலைக்கழகம் என எந்த சம்பவத்துக்கும் வாயை திறக்கவில்லையே திராவிட மாடலு