உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மஞ்சுநாத் போட்டி: ம.ஜ.த.,வின் முதல் தற்கொலை முயற்சி

மஞ்சுநாத் போட்டி: ம.ஜ.த.,வின் முதல் தற்கொலை முயற்சி

பெங்களூரு : ''முன்னாள் பிரதமர் தேவகவுடா, தன் மருமகன் மஞ்சுநாத்தை, பா.ஜ., வேட்பாளராக போட்டியிட அனுமதி கொடுத்து இருப்பது, ம.ஜ.த.,வின் முதல் தற்கொலை முயற்சி,'' என்று, துணை முதல்வர் சிவகுமார் விமர்சித்து உள்ளார்.பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:தேர்தலில் சீட் கிடைக்கா விட்டால், தலைவர்கள் கட்சி மாறுவது இயல்பு தான். பா.ஜ., 'சீட்' கிடைக்காததால் ஜெகதீஷ் ஷெட்டர், லட்சுமண் சவதியை எங்கள் கட்சிக்கு அழைத்து வந்து, சீட் கொடுத்தோம்.பா.ஜ., முன்னாள் எம்.எல்.ஏ., மூடிகெரே குமாரசாமி, ம.ஜ.த.,வுக்கு சென்றார். இப்போது எங்கள் கட்சிக்கு வந்து உள்ளார். எங்கள் கட்சியின், சித்தாத்தங்களை ஏற்றுக்கொண்டு வருபவர்கள் யாராக இருந்தாலும், அவர்களை வரவேற்கிறோம்.பா.ஜ., கூட்டணியில் ம.ஜ.த.,வுக்கு, இரண்டு அல்லது மூன்று சீட் தான் கிடைக்கும் என்பது, எங்களுக்கு முன்கூட்டியே தெரியும். தேவகவுடா தனது மருமகன் மஞ்சுநாத்தை, பா.ஜ., வேட்பாளராக போட்டியிட அனுமதி கொடுத்து இருப்பது, ம.ஜ.த.,வின் முதல் தற்கொலை முயற்சி. தேவகவுடா இப்படி செய்வார் என்று, நான் எதிர்பார்க்கவே இல்லை.மாற்றுக் கட்சியினரை இழுத்து, தேர்தலில் நிற்க வைப்பது தான், பா.ஜ.,வின் கலாசாரம். அது இங்கு மட்டும் இல்லை. அனைத்து மாநிலங்களிலும் நடக்கிறது. ம.ஜ.த., மாநில கட்சி. அவர்களின் கட்சி விவகாரத்தில், தலையிடும் உரிமை எனக்கு இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ