| ADDED : பிப் 23, 2025 11:48 AM
புதுடில்லி: ''நமது நாட்டை பெண்களின் சக்தி வலுப்படுத்தும்,'' என பிரதமர் மோடி பேசினார்.'மன் கி பாத்' என்ற ரேடியோ நிகழ்ச்சி வாயிலாக பொதுமக்களிடையே பிரதமர் மோடி பேசியதாவது: சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் நடந்து வருகிறது. இது தொடர்பாக எல்லா இடங்களிலும் பேசப்படுகிறது. விண்வெளி துறையில் இந்தியா அற்புதங்களை செய்து வருகிறது. கடந்த மாதம் இஸ்ரோ 100வது ராக்கெட்டை விண்ணில் ஏவியது. இது பாராட்டுக்குரியது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=psn17zi5&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0
பெண் பங்களிப்பு
400க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்பட்டுள்ளன. இது நாம் விண்வெளி துறையில் புதிய உயரங்களை அடைவதற்கான வலிமையை காட்டுகிறது. நமது விண்வெளி விஞ்ஞானிகள் குழுவில், பெண் பங்களிப்பு அதிகரித்து வருகிறது. அனைத்து துறையிலும் பெண்கள் தங்களது பங்களிப்பை அளித்து வருகின்றனர். விண்வெளித் துறையில் பணியில் இணைய நமது இளைஞர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். பெண் சக்தி
மார்ச் 8ம் தேதி 'சர்வதேச மகளிர் தினம்' கொண்டாடப்பட உள்ளது. இந்நாள் பெண் சக்தியை போற்றுவதற்கு சிறப்பான சந்தர்ப்பம் ஆகும். நமது நாட்டை பெண்களின் சக்தி வலுப்படுத்தும். மகளிர் தினத்தன்று எனது
சமூகவலைதள கணக்குகளை பெண்களிடம் ஒப்படைக்க போகிறேன். அன்றை தினம் பெண்கள்
பதிவுகளை பகிரலாம். ஏ.ஐ., தொழில்நுட்பம்
விண்வெளி மற்றும் அறிவியலைப் போலவே, இந்தியா ஏ.ஐ., தொழில்நுட்பத்திலும் ஒரு வலுவான அடையாளத்தை பெற உள்ளது. இளைஞர்களிடையே கவலையை அதிகரிக்கும் விவகாரமாக உடல் பருமன் உள்ளது. தேசிய அறிவியல் தினத்தன்று இளைஞர்கள் அறிவியல் தொடர்பான மையங்களை பார்வையிட வேண்டும். ஒரு நாளாவது விஞ்ஞானியாக இருக்க வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.