உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேசிய மாணவர் படையில் இணையுங்க; பிரதமர் மோடி அழைப்பு!

தேசிய மாணவர் படையில் இணையுங்க; பிரதமர் மோடி அழைப்பு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'என்.சி.சி.,யில் அதிகமான இளைஞர்கள் இணைய வேண்டும். வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதில் இளைஞர்களின் பங்கு முக்கியம்' என பிரதமர் மோடி தெரிவித்தார்.116 வது மான்கி பாத் ரேடியோ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: இந்தியாவுக்கு கயனா நாட்டிற்கும் இடையிலான கலாசாரம் மற்றும் ராஜதந்திர உறவுகள் வலுவாக உள்ளது. இந்தியாவில் இருந்து நீண்ட தொலைவில் இருக்கும் கயானாவில் 'மினி பாரத்' உள்ளது. சுமார் 180 ஆண்டுக்கு முன், இந்தியர்கள் கயானாவிற்கு வயல்களில் வேலை செய்ய அழைத்துச் செல்லப்பட்டனர். இன்று கயானாவில் உள்ள இந்திய வம்சாவளியினர் அரசியல் போன்ற பல்வேறு துறைகளில் முன்னணியில் உள்ளனர்.

அர்ப்பணிப்பு

என்.சி.சி., எனப்படும் தேசிய மாணவர் படையில் அதிகமான இளைஞர்கள் இணைய வேண்டும். வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதில் இளைஞர்களின் பங்கு முக்கியம். நாட்டின் வளர்ச்சிக்கு இளைஞர்களின் ஆற்றல், திறன்கள் மற்றும் அர்ப்பணிப்பு அவசியம். தேசிய இளைஞர் தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்படும் சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாளான ஜனவரி 12ம் தேதி, அவரது 162வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்படும். இதையொட்டி மாபெரும் இளைஞர்கள் மாநாடு நடத்தப்படும். அரசியல் பின்னணி இல்லாத இளைஞர்களை அரசியலுடன் இணைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இளைஞர்கள் மாநாடு நடத்தப்பட உள்ளது.

பாராட்டு

சிட்டுக்குருவிகளை பாதுகாக்க தமிழகத்தில் நடைபெறும் முயற்சிக்கு பாராட்டுக்கள். சென்னையில் உள்ள கூடுகள் என்ற தன்னார்வ அமைப்பு, மாணவர்கள் உதவியுடன் கூடு அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. மரத்தால் ஆன கூடுகளை தயாரிக்க மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. பள்ளி வளாகங்கள் உள்ளிட்ட கட்டடங்களின் வெளிப்புறங்களில் கூடுகள் பொருத்தப்படுகின்றன. சிட்டுக்குருவிகள் இனப்பெருக்கம் செய்ய இந்த கூடுகள் பெரும் உதவியாக உள்ளன. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

pmsamy
நவ 25, 2024 10:51

பாஜக ஒளிஞ்சா எந்த படையிலையும் சேரலாம்


அப்பாவி
நவ 25, 2024 07:56

எ.சி.சி க்கு கீழே 6 ம் வகுப்பு முதல் 10 ம வகுப்புவரை ஸ்கவுட், அதுக்கு கீழே மூன்றாவது வகுப்பு முதல் 5 ம் வகுப்பு வரை சிங்கக் குருளையர் சங்கம்னு மூணாம் கிளாசிலிருந்தே தேசப்பற்றை ஊட்டி வளர்த்த மகாத்மா காந்தி பாடசாலை, விழுப்புரம்.


Ahamed Rafiq
நவ 24, 2024 19:46

நம் நாட்டு இளைய சமுதாயத்தினர் நேரம் கிடைக்கும் போது கட்டாயம் ஆன்மீகம் பழக வேண்டும் எதிர்காலத்தில் பயன்படும். எத்தனை காலம் என்னால் ஆதரவு குடுக்க முடியும் மரணம் என்னையும் தழுவும்


வைகுண்டேஸ்வரன்
நவ 24, 2024 17:48

எந்த பயனும் இல்லை என்பது என் சொந்த அனுபவம். பள்ளிக்காலம் முதல் பட்டப்படிப்பு வரை extra curricular certificates 96 வைத்திருக்கிறேன். சாரணர், NCC Airwing, Football captain in school, 3 ஆண்டுகள் தொடர்ந்து வெற்றி, Football & Basketball university player, 2 md in Long jump university level 3 times, கல்லூரியில் கலை அறிவியல் மன்ற செயலர், inter collegeate சிறந்த பேச்சாளர் விருது 3 முறை, கவிதைப் போட்டியில் கல்லூரி லெவலில் 3 முறை முதல் பரிசு, விகடன், குமுதம் இதழ்களில் சிறுகதை கவிதைகள் பிரசுரமானது, best project award in mech engg. - எல்லா சான்றிதழ் களையும் ஒரு file ல் போட்டு ஒவ்வொரு இன்டெர்வியூ விற்கும் தூக்கிண்டு போயிருக்கேன். எங்கேயும் எந்த ஆபீசரும் இந்த file ஐப் பார்க்க விரும்பவில்லை. காரணம் நேரம் இல்லை. ஒரே நாளில் 20, 30 பேரை இன்டெர்வியூ பண்ணனும். எந்த ஆபீஸ், கம்பெனி க்கும் நன்றாக ஓடறவனோ, football ஆடறவனோ, கதை கவிதை எழுதறவனோ, நல்லா சல்யூட் பண்றவனோ தேவையில்லை. எல்லோருக்கும் நல்ல என்ஜினீயர், நல்ல மேனேஜர் தான் தேவை.


hari
நவ 24, 2024 20:34

சத்தியமா நம்பிட்டோம் வைகுண்டம்


Pandi Muni
நவ 24, 2024 21:16

நன்னடத்தையும் நல்லொழுக்கமும் தேசப்பற்றும் மிகவும் முக்கியம். கப்பற்படையில் பணி கிடைக்க எனக்கு NCC ceritificate தான் மிகவும் உதவியாக இருந்தது.


அப்பாவி
நவ 25, 2024 07:58

பிழைக்கத் தெரிஞ்சவனா இருந்தா இந்நேரம் அமெரிக்காவில் இருந்திருக்கணும்.


GMM
நவ 24, 2024 17:45

ஆரோக்கிய மாணவர்கள் தேசிய மாணவர் படையில் சேருவதை கட்டாயம் ஆக்க வேண்டும். கல்வி, வேலையில் முன்னுரிமை தர வேண்டும். 50 ஆண்டுக்கு முன், கவர்னர் பதவிக்கு தேசிய மாணவர்கள் மரியாதை அணிவகுப்பு போன்ற பசுமையான நினைவுகள் மறையாது. கமாண்டர் வாகனம் சாலையில் no signal board - போட்டு ராணுவ வீரர்கள் பைக்கில் செல்வதை காண்பது பிரமிப்பாக இருக்கும். பிஜேபி மராட்டிய மாநிலம் கைப்பற்றியது போல், டெல்லி, கல்கத்தா, சென்னை மாநிலம் நல்ல ஆட்சியர் கீழ் வர மக்கள் விரும்ப வேண்டும்.


அப்பாவி
நவ 24, 2024 16:03

அந்தக் காலத்திலேயே என்.சி.சி ல சேர்ந்தோம். இவர் புதுசா சொல்றாரு.


Pandi Muni
நவ 24, 2024 21:39

திராவிடனுக்கு சொன்னாரு


hariharan
நவ 24, 2024 15:07

தேசிய மாணவர் படையை பற்றி மாணவர்கள், ராகுல் கலந்துரையாடலில் ஒரு மாணவன் தேசிய மாணவர் படையைப்பற்றி கேட்ட கேள்விக்கு மாணவர் தேசிய படை என்றால் எனக்கு ஒன்றும் தெரியாது என்று சொன்னார். அவருக்கும் இந்த நாட்டின் பிரதம மந்திரி ஆகவேண்டும் என்று தணியாத ஆசை.


Barakat Ali
நவ 24, 2024 13:41

தேசிய மாணவர் படையில் இணையுங்க ...... அதுக்கும் முன்னாடி நாட்ல இருக்குற ஐந்தாம் படை மீது நடவடிக்கை எடுங்க ....


Pandi Muni
நவ 24, 2024 21:21

அய்யோ அய்யோ