உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆடம்பர திருமணம் வேண்டாம்; மராத்தா சமூக தலைவர்கள் முடிவு

ஆடம்பர திருமணம் வேண்டாம்; மராத்தா சமூக தலைவர்கள் முடிவு

புனே : மஹாராஷ்டிராவில் நடந்த திருமணங்களுக்கான நடத்தை விதி கூட்டத்தில், 'திருமணங்கள் எளிமையாக நடத்தப்பட வேண்டும்; ஆடம்பர விழாக்கள் வேண்டவே வேண்டாம்' என, முடிவு செய்யப்பட்டது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=f4c8yzz3&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மஹாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகியாக இருந்த ராஜேந்திர ஹகவானே என்பவரின் மருமகள் வைஷ்ணவி, வரதட்சணை கொடுமை காரணமாக கடந்த 16ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். ராஜேந்திர ஹகவானே, மராத்தா சமூகத்தைச் சேர்ந்தவர்.

வரதட்சணை

தேசியவாத காங்., தலைவரும், துணை முதல்வருமான அஜித் பவார் முன்னிலையில், கடந்தாண்டு நடந்த திருமணத்தின் போது 595 கிராம் தங்கம், வெள்ளி நகைகள் மற்றும் சொகுசு கார் வரதட்சணையாக வழங்கப்பட்ட நிலையில், மேலும் 2 கோடி ரூபாய் கேட்டு துன்புறுத்தியதாலேயே அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. இதையடுத்து, ராஜேந்திர ஹகவானே மற்றும் அவரது மகன் சுஷில் ஆகியோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். இந்த விவகாரத்தில் ராஜேந்திர ஹகவானே மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டனர். வரதட்சணை விவகாரத்தில் வைஷ்ணவி தற்கொலை செய்த சம்பவம் மராத்தா சமூக தலைவர்களிடையே புயலை கிளப்பியது.'ஆடம்பரமாக நடத்தப்படும் விழாக்களால் எந்த உபயோகமும் இல்லை' என, மராத்தா சமூக தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர். இது தொடர்பாக முடிவெடுக்கவும், திருமண நடத்தை விதிகளை ஏற்படுத்தவும் மஹா.,வில் உள்ள மராத்தா சமூகத்தின் மூத்த தலைவர்கள் நேற்று ஆலோசனை கூட்டம் நடத்தினர்.இதில், மஹாராஷ்டிராவைச் சேர்ந்த மூத்த அரசியல் தலைவர்களும் பங்கேற்றனர்.அப்போது, 'ஆடம்பர திருமணங்களைத் தவிர்த்து, எளிமையான திருமண நிகழ்வுகளை ஊக்குவிக்க வேண்டும். மாமியார் - மருமகள் உறவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்' என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

புறக்கணிப்பு

இது குறித்து காங்.,கின் அரவிந்த் ஷிண்டே கூறுகையில், ''ஆடம்பர திருமணங்களால் உயிரிழப்பு ஏற்படுவது கவலையளிக்கிறது. எனவே, எளிய முறை திருமணங்களை ஆதரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மருமகள்களை புறக்கணிக்கும் குடும்பங்களை சமூக ரீதியாக புறக்கணிக்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அத்தகைய குடும்பங்களுடன் யாரும் திருமண உறவை ஏற்படுத்தக்கூடாது.''அப்போதுதான், வைஷ்ணவியின் மரணம் போன்ற சம்பவங்கள் நடக்காது. நடுத்தர வர்க்க குடும்பங்கள், பணக்காரர்களின் ஆடம்பர திருமண விழாக்களை பின்பற்றுகின்றன. ''இதன் விளைவாக கடன் உள்ளிட்ட நிதி நெருக்கடி ஏற்படுகிறது. இதுபோன்ற நடைமுறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க சமூகத்தினர் முன்வர வேண்டும்,'' என்றார். கூட்டத்தில் பங்கேற்ற பிற தலைவர்களும் இதே கருத்தை வலியுறுத்தினர். இயற்றப்பட்ட தீர்மானங்களை மஹாராஷ்டிரா அரசுக்கு அனுப்பி வைக்கவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Natchimuthu Chithiraisamy
ஜூன் 19, 2025 13:22

நடுத்தர வர்க்க குடும்பங்கள், பணக்காரர்களின் ஆடம்பர திருமண விழாக்களை பின்பற்றுகின்றன. மூன்று மாத வருமானம் பணக்காரர் விட்டு கல்யாணம் அவருக்கு சிரமம் இல்லை. நடுத்தர வர்க்க கல்யாணம் 10 முதல் 20 வருட உழைப்பு. கடைசியில் புகழ் பணக்காரனுக்கே போய்சேருக்கிறது. நடுத்தரனுக்கு கல்யாண புகழ் சேருவதில்லை.


Pats, Kongunadu, Bharat, Hindustan
மே 28, 2025 08:29

வீட்டிலோ அல்லது கோயிலிலோ திருமண விழா நடக்கவேண்டும். இருவீட்டார் தலா 25 பேருக்கு மிகாமல் இருக்க வேண்டும். அக்கம்பக்கத்தார், நண்பர்கள் எண்ணிக்கையும் தலா 25 பேருக்கு மிகாமல் இருக்க வேண்டும். ஆக மொத்தம் நூறுபேர்களுக்கு மிகாமல் இருத்தல் சிறப்பு. ரிசப்ஷன், சங்கீத், மெல்லிசை, மாப்பிள்ளை ஊர்வலம் போன்றவை அறவே ஒழிக்கப்பட வேண்டும். அளவுக்கு மீறிய மெகந்தி, மேக்கப், போட்டோ ஷூட், மேடை அலங்காரம், பஃபே வகை உணவுகள் போன்ற அசிங்கங்கள் நிறுத்தப்பட வேண்டும். இதுபோன்ற தேவையற்ற செலவுகளுக்காகும் பணத்தை மகளின் பெயரில் டெபாசிட் செய்யலாம், அல்லது பெற்றோர் மிச்சம் பிடிக்கலாம். குடும்பத்தின் பொருளாதார நிலையை, எதிர்கால பொருளாதார தேவையை உணர்ந்து மணமக்கள் பெற்றோருடன் ஒத்துழைக்க வேண்டும். பெற்றோர் 20-30 ஆண்டுகளாக சேமித்த பணத்தை கண்டவர்களுக்கு வாரியிறைப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. மாறுவோம், மாற்றுவோம்.


உண்மை கசக்கும்
மே 28, 2025 06:57

நம் தமிழ்நாட்டிலும் ஒரு சாதி இருக்கிறது. நகரத்தார் நாட்டுக்கோட்டை செட்டியார். இன்றும் லட்சங்களையும் தங்க வைர நகைகளையும் வரதட்சிணையாக கேட்கும் இந்த சாதியை சார்ந்த ஆணை பெற்ற பெற்றோர்கள். ப சிதம்பரம் போன்ற தலைகள் இதை பற்றி வாய் திறப்பதில்லை.


சாமானியன்
மே 28, 2025 06:39

காலத்திற்கேற்ற அருமையான யோசனை. தமிழகத்திலும் வரவேண்டும். மண்டபம், சாப்பாட்டு செலவே பல லட்சம் ஆகின்றது. திருமண செலவுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும். சமுதாயக்கூடங்களில் திருமணம் நடத்தினால் செலவு குறையலாம். பெண்ணை பெற்றோர் திருமண செலவுகட்காக நிலத்தை விற்கச் சென்ற போது அதை வஃக்பு வாரியம் ஆக்ரமித்துள்ளதால் தடை. சோகமாக நிகழ்வு.


sasikumaren
மே 28, 2025 06:07

நம்பி வந்த ஒரு செல்லமான பெண்ணை இப்படி கொன்று விட்டான்களே கயவர்கள் எப்படி இந்த கொடுர குணம் வருகிறது ராட்சதர்கள் நினைத்து கூட பார்க்க முடியாத கொடுமை கடவுளே


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை