உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அரசு அலுவலகங்களில் இனி மராத்தி தான் பேசணும்! மஹாராஷ்டிராவில் அதிரடி

அரசு அலுவலகங்களில் இனி மராத்தி தான் பேசணும்! மஹாராஷ்டிராவில் அதிரடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை; மஹாராஷ்டிராவில் அனைத்து அரசு அலுவலகங்களிலும் மராத்தி மொழி பேசுவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. மஹாராஷ்டிராவில் மராத்தி மொழியை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் அரசு மேற்கொண்டுள்ளது. அதன் முக்கிய கட்டமாக மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் மராத்தி மொழியை கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. தங்களின் அலுவலகங்களில் அனைவரும் மராத்தி மொழியைத் தான் கட்டாயம் பயன்படுத்த வேண்டும். நாட்டின் பல்வேறு மாநிலங்களில், பிற நாடுகளில் இருந்து வருபவர்கள் தவிர்த்து அனைத்து பார்வையாளர்களுடனும் மராத்தி தான் பேச வேண்டும் என்று அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது; மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், மாநகராட்சி அலுவலகங்களில் மராத்தி மொழி தான் பேசவேண்டும். மராத்தியில் அனைவரும் பேசுவபதை ஊக்குவிக்கும் விதமாக, அலுவலகங்களில் இருக்கும் சைன்போர்டுகள் மராத்தியில் நிறுவப்படும். அரசு அலுவலக கணினிகளில் இனி மராத்தி மொழியை தட்டச்சு செய்யும் வகையில் விசைப்பலகைகள் (type writing) இருக்கும். இந்த விதியை மீறினால் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அலுவலகம் அல்லது அந்தந்த பொறுப்பாளரிடம் புகார் அளிக்கலாம். மராத்தி பேசாதவர்கள் உத்தியோகத்தில் ஒழுங்கற்ற செயலை செய்ததாக கருதி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம். அவ்வாறு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் திருப்தி இல்லை எனில், மனுதாரார் மஹாராஷ்டிர சட்டசபையின் மராத்தி மொழிக்குழுவில் மேல் முறையீடு செய்யலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

அப்பாவி
பிப் 04, 2025 16:40

மராத்தில திருக்குறள் மாதிரி ஏதாவது இருக்கா? ஜீ க்கு எழுதிக் குடுங்க. அடுத்த தடவை பேசுவாரு. மராத்தின்னா உயிர்.


S Ramkumar
பிப் 04, 2025 10:07

மராட்டியத்தில் எல்லா அரசு அலுவலகங்களிலும் மராட்டிதான் பேசுவார்கள். எல்லா பலகைகளும் மராட்டியத்தில் தான் இருக்கும். நான் வெளி மாநிலத்தவன். மராட்டி தெரியாது என்று சொன்னால் ஹிந்தியில் பேசுவார்கள். மும்பை நிலை இப்படி. புனே, சோலாப்பூர், கோலாப்பூர் பகுதிகளில் நிறையபேருக்கு ஹிந்தி தெரியாது அல்லது திணறுவார்கள். ஹிந்தி பேசுபவர்கள் பலர் இருக்கிறார்கள். விதர்பா, மரத்தவாடா பகுதிகள் அடுத்த ஹிந்தி பேசும் மாநிலங்களை ஒற்றி இருப்பதால் தாராளமாக ஹிந்தி மராட்டி பேசுவார்கள். இது ஒரு மாநில உத்தரவு அவ்வளவுதான். இங்கு எல்லா பாத்திரங்களும் மராத்தியில் தான் இருக்கும். மராட்டி எழுத்துக்கள் தொண்ணூரு சதவீதம் தேவநாகரி அதாவது ஹிந்திக்கும் மராத்திக்கும் பொதுவானவை.


புவனேஷ் மராத்தி
பிப் 04, 2025 09:53

இந்தியை திணிச்சே மும்பைல மராத்திய இல்லாம பண்ணிட்டாங்க. இது இப்போதான் இவருக்குப் புரிஞ்சிருக்கு.


vbs manian
பிப் 04, 2025 09:45

மோசமான முடிவு. தமிழகத்தை பார்த்து காப்பி அடிக்க வேண்டாம்.


pmsamy
பிப் 04, 2025 08:58

பாஜக ஆட்சி செய்கிற மகாராஷ்டிராவில் ஹிந்திக்கு எதிர்ப்பு???


அப்பாவி
பிப் 04, 2025 07:50

ஐயய்யோ... என்னடா இந்திக்கு வந்த சோதனை? ஃபட்னாவிஸ் கொஞ்சம் லேட்டா முழிச்சிக்கிட்டாரு. மராத்தி காப்பாற்றப்பட வாழ்த்துக்கள்.


Kasimani Baskaran
பிப் 04, 2025 07:25

நல்ல முயற்சிக்கு பாராட்டுகள். இதன் மூலம் மாநில / பிராந்திய தாய் மொழி அழியாமல் பாதுகாக்க முடியும்.


Mani . V
பிப் 04, 2025 05:45

இதுபோல் தமிழ்நாட்டில் அலுவலகங்களில் தமிழில்தான் பேச வேண்டும் என்று மிஸ்டர் இரும்புக்கை கோப்பால் உத்தரவிடுவாரா?


J.V. Iyer
பிப் 04, 2025 04:22

அப்படி போடு, போடு.. இனி என்ன செய்யப்போகிறாய் மாடல் அரசே?


ஜெய்ஹிந்த்புரம்
பிப் 04, 2025 07:06

அய்யிருக்கு செய்தி புரியவில்லையா? தமிழ்நாட்டில் அரசு அலுவலகங்களில் தமிழ் மட்டுமே பேசவேண்டும் என்று ஆணை போட்டால் அண்ணாமலை சவுக்கால் அடித்து கொள்வார், உங்கள் கும்பல் குய்யோ முறையோன்னு புலம்ப வந்து விடுவீர்களே.


Priyan Vadanad
பிப் 04, 2025 00:53

நமது தமிழ்நாட்டில் மட்டும் இந்தி பேசுவதுதான் நல்லது. அது நாட்டின் பொதுமொழியாச்சுதே ஊருக்கு உபதேசம் உனக்கில்லடி கண்ணே


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை