உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சான்றிதழ் இல்லாவிட்டாலும் திருமணம் செல்லுபடியாகும்

சான்றிதழ் இல்லாவிட்டாலும் திருமணம் செல்லுபடியாகும்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பிரயாக்ராஜ்: 'திருமண சான்றிதழ் இல்லாத காரணத்திற்காக அந்த திருமணம் செல்லுபடியாகாது என்று உத்தரவிட முடியாது' என, அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உத்தர பிரதேசத்தை சேர்ந்த ஒரு தம்பதி விவாகரத்து கேட்டு அஸம்கரில் உள்ள குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி, இருவருக்கும் திருமணம் நடந்ததற்கான சான்றாக, திருமண பதிவு சான்றிதழை சமர்பிக்கும்படி கேட்டார். திருமணத்தை பதிவு செய்ய தவறியதால், சான்றிதழை வழங்க முடியாத நிலை ஏற்பட்டதாகவும், ஹிந்து திருமண சட்டத்தின்படி திருமண சான்றிதழ் அவசியம் இல்லை எனவும், இருதரப்பிலும் நீதிபதியிடம் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதை ஏற்க மறுத்த நீதிபதி, அவர்களது விவாகரத்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து இருவரும் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவை விசாரித்து, நீதிபதி மணிஷ் நிகாம் அளித்த தீர்ப்பு: திருமணத்தை பதிவு செய்ய தவறியதற்காக, அந்த திருமணம் முறைப்படி நடந்த திருமணம் அல்ல என கூறி விட முடியாது. திருமணத்தை பதிவு செய்து, அதற்கான சான்றிதழை பெறுவது என்பது ஒரு நடைமுறை தான். அதற்காக சான்றிதழ் இல்லாததால், அந்த திருமணம் செல்லுபடியாகாது என, ஹிந்து திருமணச் சட்டத்தில் கூறப்படவில்லை. இதை பல்வேறு உயர் நீதிமன்றங்களும், ஏன் உச்ச நீதிமன்றமும் கூட உறுதி செய்திருக்கிறது. இவ்வாறு நீதிபதி தீர்ப்பளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

தத்வமசி
ஆக 31, 2025 09:46

இந்து சமய திருமணங்கள் மற்ற மதத்தில் உள்ள வழக்கம் போல கிடையாது. இதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். நிச்சயதார்த்தம் நடந்த பிறகும் திருமணம் தடை பெறலாம். ஜானவாசம் என்கிற பென்னழைப்பு-மணமகன் அழைப்பு நடந்த பிறகும் திருமணம் தடை பெறலாம். ஏன் தாலி கட்டுவதை திருமணமாக காட்டும் திரைப்படங்களுக்கு தெரியாது இது இந்து திருமண சட்டப்படி திருமணம் நடந்தேற வில்லை என்று. மணமகன்-மணமகள் என்று இருவரும் தாலி கட்டிய பிறகு ஒன்று சேர்ந்து ஹோமம் வளர்த்து தீவலம் வந்து, சப்தபதி எனும் சடங்கு முடிந்தால் மட்டுமே இந்து திருமண சட்டப்படி திருமணம் நடந்ததாக சட்டம். கோவிலில் தாலி கட்டிக் கொள்வது, ஓடிப் போய் கம்யுனிஸ்டு அலுவலகத்தில் தாலி கட்டிக் கொள்வது, போலிஸ் நிலையத்தில் தாலி கட்டிக் கொள்வது, பதிவு அலுவலகத்தில் தாலி கட்டிக் கொள்வது போன்றவை பேப்பர் திருமணமாக இருக்கலாம். இந்து முறைப்படி திருமணம் இல்லை.


V RAMASWAMY
ஆக 31, 2025 07:10

திருமணப் பதிவு விதிமுறைகளையும் மாற்றவேண்டும். திருமணத்தன்று பதிவாளர் மண்டபத்திற்கு வந்து பதிவு செய்ய எதுவாக வழிமுறைகள் செய்யவேண்டும். இல்லாவிடில் வேறு ஏதாவது தேதியில் பதிவாளர் முன்னிலையில் மாலை மாற்றி பதிவு தேதி வேறு மாறுபடுகிறது. இவ்வித குளறுபடிகள் இல்லா நடைமுறைகள் மாற்றியமைக்கப்படவேண்டும்.


Ram
ஆக 31, 2025 06:33

சரியாக தீர்ப்பு கூட சொல்லத்தெரியாமல், முன்பு வழங்கியிருந்த தீர்ப்பைக்கூட படிக்காமல் , வழக்கை தள்ளுபடிசெய்த அந்த நீதிபதி எந்த கோட்டாவில் வந்தவர்


nagendhiran
ஆக 31, 2025 06:02

சட்டம் என்றால் அனைவருக்கும்"சமமாக இருக்கனும்? பதிவு செய்தால்"எல்லோரும் பதிவு செய்யனும் இல்லைனா அனைவருக்கும் வேண்டாம்னு சொல்லனும்? இப்படி கட்டாயம் இல்லைனு சொல்வது? பதிவு"செய்ய வேண்டுமானு நினைப்பு வராதா?


nagendhiran
ஆக 31, 2025 06:02

சட்டம் என்றால் அனைவருக்கும்"சமமாக இருக்கனும்? பதிவு செய்தால்"எல்லோரும் பதிவு செய்யனும் இல்லைனா அனைவருக்கும் வேண்டாம்னு சொல்லனும்? இப்படி கட்டாயம் இல்லைனு சொல்வது? பதிவு"செய்ய வேண்டுமானு நினைப்பு வராதா?


Kasimani Baskaran
ஆக 31, 2025 05:24

இதன் அடிப்படையில்தான் தீம்காவினர் டபுள்ஸ், ட்ரிப்பிள்ஸ் என்று ஜமாய்க்கிறார்கள்.


சிட்டுக்குருவி
ஆக 31, 2025 05:02

"ஹிந்து திருமணச் சட்டத்தில் கூறப்படவில்லை. இதை பல்வேறு உயர் நீதிமன்றங்களும், ஏன் உச்ச நீதிமன்றமும் கூட உறுதி செய்திருக்கிறது." இது எப்படி நீதிபதியாய் இருக்கும் ஒருவருக்கு தெரியாமல் இருக்கும் .நீதிபதியாய் இருக்கும் ஒருவர் தான் செய்யும் தொழிலுக்கு தன்னை சரியாக தயாற்படுத்திக்கொள்ளவில்லை என்பதுதான் தெரிகின்றது .


Ramesh Sargam
ஆக 31, 2025 02:18

குடும்பநல நீதிமன்ற நீதிபதிகள் எந்த நாட்டு சட்ட புஸ்தகத்தை படித்தார்கள்?