உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / திருப்பதியில் பிப்., 4ம் தேதி முதல் பக்தர்களுக்கு மசால் வடை; தேவஸ்தானம் அறிவிப்பு

திருப்பதியில் பிப்., 4ம் தேதி முதல் பக்தர்களுக்கு மசால் வடை; தேவஸ்தானம் அறிவிப்பு

திருப்பதி: திருப்பதியில் பிப்., 4ம் தேதி முதல் பக்தர்களுக்கு அன்ன பிரசாதத்துடன் இனி மசால் வடையும் வழங்கப்படும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க, லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். தேவஸ்தானம் கடந்த 1983ம் ஆண்டு முதல் தொடர்ந்து 42 வருடங்களாக பக்தர்களுக்கு திருமலை மற்றும் திருப்பதியில் அன்னதானம் வழங்கி வருகிறது. அன்னதானத்தில் சாதம், சாம்பார், ரசம், பொரியல், சட்னி, சர்க்கரை பொங்கல் உள்ளிட்டவை பரிமாறப்பட்டு வருகிறது. இந்த அன்னபிரசாதத்தில் பக்தர்களுக்கு மசால் வடை வழங்க தேவஸ்தான அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதற்கு வெங்காயம், பூண்டு இல்லாமல் மசால் வடைகளை தயாரித்து சோதனை முறையில், 5 ஆயிரம் பக்தர்களுக்கு வழங்கினர். இதற்கு பக்தர்கள் திருப்தி தெரிவித்ததை தொடர்ந்து, வரும் பிப்., 4ம் தேதி ரத சப்தமி முதல் அனைத்து பக்தர்களுக்கும் வடை பிரசாதம் வழங்கப்படும் என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Ramesh Sargam
ஜன 21, 2025 20:21

தமிழகத்தில் அதிக வருமானம் வரும் கோவில்களில் இதுபோன்று பிரசாதம் எதுவும் கொடுப்பதில்லை. வரும் வருமானமெல்லாம் திமுக அரசு கொள்ளையடிக்கிறது. இப்பொழுதுதான் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஒரு சிறு நெல்லிக்காய் அளவு லட்டு பிரசாதம் கொடுக்கிறார்கள்.


Seshadri
ஜன 21, 2025 18:45

அன்றே மயில்சாமி ஜுலேபின்னு சொன்ன போது சிரிச்சோம்… கலிகாலம்டா


V வைகுண்டேஸ்வரன்
ஜன 21, 2025 17:22

அப்படியே மெது வடை, பஜ்ஜி, போண்டா, என்று டெவெலப் பண்ணிண்டே போங்கோ. ஏன் இதுக்கு யாரும் கருத்து எதுவும் எழுதவில்லை? வைகு Fanclub கூட பேசாம இருக்கு???


R S BALA
ஜன 21, 2025 17:20

மெதுவடையும் ஒருநாள்விட்டு ஒருநாள் போடுங்க பாஸ்..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை