உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காங்கிரஸ் தலைவர் வீட்டில் புகுந்த முகமூடி கொள்ளையர்கள்!

காங்கிரஸ் தலைவர் வீட்டில் புகுந்த முகமூடி கொள்ளையர்கள்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

இந்தூர்: மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் ஜிது பட்வாரியின் வீட்டிற்குள் நள்ளிரவில் நுழைந்து முகமூடி அணிந்த கும்பலின் அட்டகாசம் அரசியல் வட்டாரத்தை அதிர்ச்சியடைய செய்துள்ளது.மத்தியப் பிரதேச காங்கிரஸ் தலைவராக ஜிது பட்வாரி உள்ளார். இவரது வீடு இந்துாரில் உள்ளது. நேற்று நள்ளிரவில் முகமூடி அணிந்த 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று இவரது வீட்டில் புகுந்தது.இந்த கும்பல், பட்வாரியின் வீட்டிற்கு மின்சார இணைப்பை துண்டித்து, வளாகத்தை இருளில் மூழ்கடித்து, உள்ளே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை செயலிழக்கச் செய்தனர். அங்கிருந்த அலுவலகத்தில் புகுந்து திருடன் முயற்சி மேற்கொண்டனர். எதுவும் கிடைக்காத நிலையில் அங்க இருந்து தப்பிச் சென்றனர்.இந்த சம்பவம் அருகில் உள்ள குடியிருப்பாளர்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.குடியிருப்பாளர்கள் கூறுகையில், 'கொள்ளையர்கள் ஜன்னல் வலைகளை வெட்டி உள்ளே நுழைய முயன்றனர்' என்றனர்.அந்தக் கும்பல் அதிகாலை 2 மணியளவில் பிஜல்பூருக்குள் நுழைந்ததாகவும், கடைசியாக அதிகாலை 4:30 மணியளவில் காணப்பட்டதாகவும் கூறினர்.சிசிடிவி காட்சிகளை முக்கியதடமாக கொண்டு போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.இந்த சம்பவத்தைத் தொடர்ந்துமாநிலத் தலைவர் ஜிது பட்வாரிக்கு பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைமை வலியுறுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

V Venkatachalam
செப் 07, 2025 16:20

ஏதோ ஆட்கள் புகுந்தான்கள். கான்+கிராஸ் காரனுங்க பாதுகாப்பை அதிகப்படுத்தணும் ன்னு சொல்றானுங்க இது சரி.. இதே மாதிரி அக்னி தேவதை புகுந்து இருந்தால் அப்பவும் பாது காப்பை அதிகப்படுத்தணும் ன்னு சொல்வான்களா?


Kasimani Baskaran
செப் 07, 2025 15:35

மகா கொள்ளையர்கள் வீட்டில் கொள்ளை என்பது ஓவரானது.. வருமான வரி ஏய்ப்பு செய்ய இது ஒரு உத்தியாக இருந்து தொலைக்கப்போகிறது


mohanram NK
செப் 07, 2025 17:25

கொள்ளை க்காரன் வீட்டில் கொள்ளை க்காரனா?? ரொம்ப வே துணிச்சல்


Iyer
செப் 07, 2025 14:51

பங்குபோடுவதில் பிரச்னை என்று கேள்விப்பட்டேன்.


R. SUKUMAR CHEZHIAN
செப் 07, 2025 14:09

தப்பாக பேசக்கூடாது ஒருவேள கூட்டணி பற்றி பேச போய் இருக்கலாம்.


Yaro Oruvan
செப் 07, 2025 12:21

திருநெல்வேலிக்கே அல்வாவா கான்+கிராஸ்காரன் வீட்டுலயே முகமூடி கொள்ளையா ?


Rathna
செப் 07, 2025 11:25

உள்கட்சி பிரச்சனையாக இருக்கலாம். அங்கே இதெல்லாம் ரொம்ப சாதாரணமப்ப.


Artist
செப் 07, 2025 10:34

சோராவர் மோர் ..அதாவது திருடன் வீட்டுல மயில் ... என்பது போல வரும்


ராஜ்
செப் 07, 2025 10:28

ஆக சிறந்த கொள்ளையர்கள் வீட்டில் கொள்ளயர்கள்


R SRINIVASAN
செப் 07, 2025 09:48

,முகமூடி அணியாத கொள்ளை கரண் வீட்டில் முகமூடி அணிந்த கொள்ளையர்


கண்ணன்
செப் 07, 2025 09:29

மிகச்சரியான அடத்துத் திருடர் தேந்தெடுத்திருப்பரோ! இதுதான் பாம்பின் கால் பாம்பறியிம் என்பதோ!


சமீபத்திய செய்தி