உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உங்க கட்சி பிரச்னையை பாருங்க; ராகுலுக்கு மாயாவதி அட்வைஸ்

உங்க கட்சி பிரச்னையை பாருங்க; ராகுலுக்கு மாயாவதி அட்வைஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: காங்கிரஸ் எம்.பி., ராகுல் மற்ற கட்சி தலைவர்களை குற்றம் சாட்டுவதற்கு முன், தனது சொந்த கட்சியின் வேலையை பார்க்க வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி அறிவுரை வழங்கி உள்ளார்.அவரது அறிக்கை: டில்லி சட்டசபை தேர்தலில் பா.ஜ.,வின் 'பி டீம்' ஆக காங்கிரஸ் செயல்பட்டது. இதனால் தான் 27 ஆண்டுகளுக்கு பிறகு தலைநகரில் பா.ஜ., ஆட்சிக்கு வந்துள்ளது. இல்லையெனில், இந்தத் தேர்தலில் காங்கிரஸின் நிலைமை இவ்வளவு மோசம் அடைந்து இருக்காது. அந்த கட்சியின் பெரும்பாலான வேட்பாளர்களின் டெபாசிட்டைக் கூட காப்பாற்ற முடியவில்லை.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=qhduh48v&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0எனவே, காங்கிரஸ் எம்.பி., ராகுல் எந்தவொரு விஷயத்திலும் மற்றவர்களை, குறிப்பாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவரை, குற்றம் சாட்டுவதற்கு முன்பு தனது சொந்த கட்சியின் வேலையை பார்க்க வேண்டும். இது நான் அவருக்கு அளிக்கும் அறிவுரை. டில்லியில் அமைக்கப்பட்ட புதிய பா.ஜ., அரசு, தேர்தலின் போது அளித்த அனைத்து வாக்குறுதிகளையும், குறிப்பாக மக்கள் நலன் மற்றும் வளர்ச்சி தொடர்பான வாக்குறுதிகளை சரியான நேரத்தில் நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில், எதிர்காலத்தில், இந்தக் கட்சியின் நிலையும் காங்கிரஸைப் போலவே மோசமாகிவிடும். இவ்வாறு மாயாவதி கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Ramesh Sargam
பிப் 21, 2025 20:27

உங்க கட்சி பிரச்சினையை பாருங்க. சரியான டோஸ்.


RAMAKRISHNAN NATESAN
பிப் 21, 2025 20:18

ராகுல் மேல மாயாவதிக்கு ஒரு தனிப்பாசம் .....


எவர்கிங்
பிப் 21, 2025 19:01

பப்பு பாப்புலாரிட்டி தேடி ஏதாவது உளறுது


RAJ
பிப் 21, 2025 17:29

சும்மா இருங்க ராகுலனு டீசெண்டா சொல்ராங்க சார்..


அப்பாவி
பிப் 21, 2025 16:48

எங்க பாட்டுக்கு நாங்க உருப்படாம போய்க்கிறோம். நீங்க உங்க பாட்டுக்கு உருப்படாம போங்க.


Siva Subramaniam
பிப் 21, 2025 16:40

வர வர அரசியல் காட்சிகள் மெகா சீரியலை விட சூப்பர் ஆக இருக்கிறது.


அசோகன்
பிப் 21, 2025 16:04

திருடனுக்கும் திருடனுக்கும் நடக்கும் சண்டை........ தனக்கு தானே சிலை வைத்துக்கொண்ட இரண்டாவது தலைவர் மாயாவதி...... முதல் ஆள் நம்ம கட்டுமரம்தான்


S.V.Srinivasan
பிப் 21, 2025 15:38

ராஹுலு கட்சிக்கு பிரச்சனையே ராஹுலுதான்.


Laddoo
பிப் 21, 2025 15:31

மிஸ் மாயாவதி, கிழவனைக் கொன்று, பாஜகவை ஏமாற்றி நீங்கள் அனுபவிப்பதுதான் என்ன? வயோதிக நிலைமையில் ஊழலில் கொள்ளையடித்த பணத்தை நீங்கள் எங்கே கொண்டு போகப் போகிறீர்கள்? கடவுள் இருக்கிறார் மாயம்மா மக்களை ஏமாற்றி ஊழலில் உழன்று பிரண்டு வாழும் அத்தனை பிறவிகளுக்கும் நீங்க ஓர் உதாரணமா இருங்க


முக்கிய வீடியோ